கூகுள் நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாட்டில் புதிய செல்போன் ஆலை: முதல்முறையாக அமைப்பதால் முதல்வர் மு.க.ஸ்டாலினை தேர்தல் முடிவுக்கு பிறகு சந்திக்க திட்டம்

Update: 2024-05-24 06:25 GMT

Stalin 

உலகப் புகழ் பெற்ற கூகுள் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு பாக்ஸ்கான் நிறுவன அதிகாரிகளுடன் சென்று தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த பேச்சுவார்த்தையின் பயனாக, கூகுள் நிறுவன அதிகாரிகள் தமிழ்நாட்டில் பாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து கூகுள் பிக்சல் செல்போன் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க முதன்முறையாக முன்வந்துள்ளனர். இதுதொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திப்பதற்கு கூகுள் நிறுவன அதிகாரிகள் விரைவில் சென்னை வர உள்ளனர். தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசி ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளனர்.

Similar News