உச்ச நீதிமன்ற வழக்குக்கு பின்னர் 5 கட்ட வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிட்டது தேர்தல் ஆணையம்
By : King24x7 Rafi
Update: 2024-05-26 06:15 GMT
தமிழ்நாட்டை பொருத்தவரை முதலாவதாக தர்மபுரியில் 81.20 சதவீதமும், இரண்டாவதாக கள்ளக்குறிச்சி 79.21 சதவீதமும், மூன்றாவதாக 78.70 சதவீதம் கரூர் தொகுதியும் வாக்குகளை பெற்றுள்ளது. இதே போன்று சென்னை, ஆரணி , அரக்கோணம், சிதம்பரம் தென்மாவட்டங்கள் உட்பட தமிழகத்தின் 39 தொகுதிகளுக்கான வாக்கு சதவீத விவரங்களையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதே போன்று புதுவையை பொருத்தவரை 78.90 சதவீதம் மொத்த வாக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.