ராசிபுரத்தில் தேசிய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி
ராசிபுரத்தில் தேசிய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி 10.க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனா்
By : King 24x7 Website
Update: 2024-01-09 05:45 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள கொங்கு வேளாளர் சமுதாய கூடத்தில், 'கொல்லிமலை - 2024' தேசிய அளவிலான முதலாம் ஒகினோவா ரியூ திறந்தவெளி கராத்தே போட்டி நடைபெற்றது. இப்போட்டியில், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று விளையாடினர். இதில் சப் ஜூனியர் போட்டியில் 6. முதல் 13 வயது சிறுவர்களுக்கும், ஜூனியர் பிரிவில் 16 முதல் 21 முதலும் தொடர்ந்து சீனியர் பிரிவில் 21 வயதுக்கு மேல் 29.முதல் இப் போட்டிகள் நடத்தப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு தங்களது தனித் திறமைகளை மேம்படுத்தும் வகையில் பல பிரிவுகளின் கீழ் இந்த கராத்தே போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மலேசியா கராத்தே பெடரேஷன் ஆனந்தன், திமுக அயலக அணி முத்துவேல் ராமசாமி, ராசிபுரம் நகர மன்ற தலைவர் முனைவர் திருமதி ஆர் கவிதா சங்கர், ராசிபுரம் திமுக நகர கழக செயலாளர் என்.ஆர். சங்கர், மாவட்ட துணை அமைப்பாளர் ராமநாதபுரம் ஜெகதீசன், உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், கராத்தே மாஸ்டர்கள் அனைவரும் தேசிய அளவிலான சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பைகள் வழங்கி சிறப்பித்தனர். இப்போட்டிக்கான ஏற்பாட்டினை, முத்துசாமி குஜோ - ரியூ கராத்தே அகாடமி சிறப்பாக செய்திருந்தனர். இப்போட்டியில் கராத்தே மாஸ்டர், ஜட்சஸ், பெற்றோர்கள் , குழந்தைகள், மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர்.