விளையாட்டு வீராங்கனைக்கு இராஜேஸ்குமார் எம்.பி பொன்னாடை அணிவித்து பாராட்டு.
விளையாட்டு துறையில் 3 சதவிகிதம் இட ஒதுக்கீடு குறித்து பதில் கூறிய விளையாட்டு வீராங்கனைக்கு இராஜேஸ்குமார் எம்.பி பொன்னாடை அணிவித்து பாராட்டு.
நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் பெ.ராமலிங்கம் (நாமக்கல்), கு.பொன்னுசாமி (சேந்தமங்கலம்) ஆகியோர் முன்னிலையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இளைஞர்களுக்கான விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்து, விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
தொடர்ந்து, விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுடன் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் கலந்துரையாடினார். விளையாட்டு வீரர்களுக்கு வழங்கபெறும் இடஒதுக்கீடு குறித்து கேட்ட பொழுது, 3 சதவிகிதம் என சரியாக பதில் கூறிய திருவள்ளுவர் அரசு கலை கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்பு (எம்.ஏ) முதலாமாண்டு பயிலும் மாணவி லோகபிரியாவை பாராட்டும் விதமாக மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் பொன்னாடை அணிவித்து, புத்தகம் வழங்கி சிறப்பு செய்தார். இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை எம்.சிவக்குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் எஸ்.கோகிலா, அட்மா குழுத்தலைவர் அசோக் குமார், உள்ளாட்சி பிரதிநிதிகள், துறைசார்ந்த அலுவலர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.