இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 12 வகை சீர் வரிசையுடன் கூலி தொழிலாளியின் திருமணம்

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 12 வகை சீர் வரிசையுடன் கூலி தொழிலாளியின் திருமணம்

Update: 2024-10-21 06:52 GMT

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 2 வகை சீர் வரிசையுடன் கூலி தொழிலாளியின் திருமணம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…




 திருத்தணி முருகன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 4 கிராம் தங்கம் மற்றும் 12 வகை சீர் வரிசையுடன் கூலி தொழிலாளியின் திருமணம்஛ கோயில் இணை ஆணையர் நடத்தி வைத்தார்.



திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயில் திருத்தணி அடுத்த முதுகூர் கிராமத்தைச் சேர்ந்த பாண்டி மற்றும் அரக்கோணத்தைச் சேர்ந்த லட்சமி  ஆகியோருக்கு இலவச திருமண நடத்தி வைக்க கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனை ஏற்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோயில் இணை ஆணையர் ரமணி முன்னிலையில் பாண்டி - லட்சுமி திருமணம் நடைபெற்றது.

அப்போது கட்டில் பீரோ சில்வர் பாத்திரங்கள் மற்றும் 4 கிராம் தங்கம்  உள்பட 60 ஆயிரம்  மதிப்புள்ள சீர்வரிசைகளை இந்து சமய அறநிலையத் துறை சார்பில் வழங்கி மணமக்களை  வாழ்த்தினர்.

இதில் கோயில் தக்கார் சுரேஷ்பாபு மற்றும் கோயில் நிர்வாகிகள், மணமக்களின் உறவினர்கள் இருந்தனர்.

Tags:    

Similar News