கரூர் கூட்டத்தில் நடந்தது என்ன? ஆம்புலன்ஸ் இடையூறு ஏன்: அமுதா ஐஏஎஸ்
ஜெனரேட்டரை சுற்றியுள்ள தகடுகளை தவெகவினர் பிரித்து சென்றதால் பாதுகாப்பு கருதி மின்சாரம் நிறுத்தப்பட்டது. தகர கொட்டகைக்குள் தவெகவினர் சென்றதால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே ஜெனரேட்டரை ஆப் செய்தனர் என அமுதா ஐஏஎஸ் விளக்கம் அளித்துள்ளார்.;
amutha ias
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமுதா ஐஏஎஸ், “விஜய்யின் கடந்த பிரச்சாரங்களின் அடிப்படையில் 20 ஆயிரம் பேர் கரூரில் வருவார்கள் என கணிக்கப்பட்டது. தவெகவினர் கூறியதைவிட அதிக தொண்டர்கள் வருவார்கள் என்பதால் வேலுச்சாமிபுரம் தேர்வு செய்யப்பட்டது. தவெகவினர் முதலில் கேட்ட இடத்தில் அமராவதி ஆற்றுப் பாலமும், பெட்ரோல் பங்க்கும் உள்ளது. இரண்டாவதாக உழவர் சந்தை பகுதி மிகக்குறுகிய இடம் என்பதால் 5 ஆயிரம் பேர் மட்டுமே திரள முடியும். 25 ஆம் தேதியே வேலுச்சாமிபுரம் ஒதுக்கீடு செய்வதாக கூறியபோது அதனை தவெகவினர் ஏற்றுக்கொண்டனர். ஹை ரிஸ்க் பகுதிகளில் 50 பேருக்கு ஒரு காவலர் என்பதே நடைமுறை, கரூரில் 20 பேருக்கு ஒரு காவலர் பணியில் இருந்தனர். அதன்படி, 500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருந்தனர். கரூர் த.வெ.க கூட்டத்தில் தடியடி நடத்தப்படவில்லை. கூட்டத்தை போலீசார் விரட்டி மட்டுமே விட்டனர். கூட்டத்தை ஒழுங்குபடுத்தவே செய்தனர். தவெகவினர் மட்டும் 7 ஆம்புலன்ஸ்களை ஏற்பாடு செய்திருந்தனர். விஜய் பரப்புரை வாகனத்தின் கூடவே 2 ஆம்புலன்ஸ்கள் வந்தன. கூட்டத்தில் அடிக்கடி ஆம்புலன்ஸ் தென்பட்டதற்கு காரணம் இதுதான். கூட்டத்தில் மயங்கி விழுந்தவர்களுக்கு காவலர்கள் முதலுதவி செய்யும் காட்சி வெளியிடப்பட்டுள்ளது. ஒரு கட்டத்திற்கு மேல் செல்ல வேண்டாம் என டிஎஸ்பி எச்சரித்தும் அவர்கள் அதனை ஏற்கவில்லை. கரூர் கூட்டத்தில் திரண்ட தவெகவினருக்கு உணவு, குடிநீர் வசதி செய்து தரவில்லை” எனக் குற்றஞ்சாட்டினர்.