பூந்தமல்லி - பரந்தூர் மெட்ரோ ரயில்- ரூ.2,125 கோடி ஒதுக்கீடு!!
சென்னை பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம் வரை மெட்ரோ ரயில் திட்டம் அமைப்பதற்கு ரூ.2,125 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.;
Metro
கடந்த ஜூன் மாதம் சென்னை பூந்தமல்லியில் இருந்து திருமழிசை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வழியாக பரந்தூர் வரை 52.94 கி.மீ தூர மெட்ரோ ரயில் திட்டத்தை இரு கட்டங்களாக செயல்படுத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்தது.முதற்கட்டமாக ரூ.8,779 கோடியில் பூந்தமல்லி- சுங்குவார்சத்திரம் வரை 27.கி.மீ தூரத்திற்கு செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக முதற்கட்டமாக ரூ.8,779 கோடியில் பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம் வரை 27.9 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ உயர் மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. பரந்தூரில் முன்மொழியப்பட்ட புதிய விமான நிலையம், திருமழிசையில் முன்மொழியப்பட்ட பேருந்து நிலையம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்தது.இந்நிலையில் சென்னை பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம் வரை மெட்ரோ ரயில் திட்டம் அமைப்பதற்கு ரூ.2,125 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பூர்வாங்க பணிகளை மேற்கொள்ளவே இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.