ராணிப்பேட்டை: தடைசெய்யப்பட்ட குட்கா பறிமுதல் - இருவர் கைது

சிப்காட் அருகே இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்த 50 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் , விற்பனை செய்த இருவர் கைது போலீசார் நடவடிக்கை.

Update: 2023-12-01 01:32 GMT

ராணிப்பேட்டை அருகே 50 கிலோ குட்கா பறிமுதல்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா குட்கா போன்ற போதை பொருட்களை அழிக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி கிரண் சுருதி உத்தரவின் படி கடைகள், வாகனத் தணிக்கை உட்பட பல இடங்களில் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று சிப்காட் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தெங்கல் பகுதியில் போலீசார் வாகன தணிக்கியில் ஈடுபட்டு இருந்தனர் அப்பொழுது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர் தற்போது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த மூட்டையை பிரித்து பார்க்கும் பொழுது தமிழக அரசால் தடை செய்யப்பட்டு ஆன்ஸ், கூல்லீப், பாக்கு என 50 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.

உடனடியாக இருசக்கர வாகனத்தில் தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்தி வந்த இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் ஆற்காடு மேல்விஷாரம் பகுதியைச் சேர்ந்த ஷாஜுல் ஹமீத், முகமதுஸ்மாயில் என தெரியவந்தது. அதனை தொடர்ந்து இருவரையும் ராணிப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News