கடம்பூர் அருகே எம்எல்ஏ ஆய்வு

சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் அருகே உள்ள சக்கரைப்பள்ளத்தை பவானி சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ பண்ணாரி பார்வையிட்டார்.

Update: 2024-05-27 13:55 GMT

கோப்பு படம்

ஈரோடு மாவட்டம் கடம்பூர் அருகே உள்ள சக்கரைப்பள்ளம் பாலம் கடந்த 2020ஆம் வருடம் கழக ஆட்சியின் போது பவானிசாகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய பகுதியான கடம்பூர் மலை பகுதியில் குத்தியாலத்தூர் ஊராட்சி குரும்பூர்பள்ளம் மற்றும் கூத்தம்பாளையம் ஊராட்சி உட்பட்ட சர்க்கரைபள்ளம் பகுதியில் பொதுமக்களின் நலன் கருதி உயர்மட்ட பாலம் அமைத்திட நிதி ஒதுக்கப்பட்டு கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் பணிகள் நடைபெற்று வருகிறது.

அதிமுக ஆட்சியில் துரிதமாக நடைபெற்று வந்த பாலம் அமைக்கும் பணியானது இன்று தொய்வுஉற்ற நிலையில் நடைபெற்று வருகின்றது. ஆகவே விரைவாக பொதுமக்களின் நலன் கருதி பாலம் கட்டுமான பணியினை முடுக்கிவிடும் பொருட்டு, இன்று நமது பவானிசாகர்  எம்எல்ஏ பண்ணாரி . நேரில் சென்று பாலம் கட்டுமான பணியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


Tags:    

Similar News