மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் ராஜேஸ்குமார் எம்.பி மனுக்கள் பெற்றார்

நாமக்கல்லில் “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம் - கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்.பி கோரிக்கை மனுக்களை பெற்றார்

Update: 2023-12-18 15:33 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெடுப்பின் நீட்சியாக, அரசுத் துறைகளை அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கு, அரசு அலுவலர்கள் வழங்கும் சேவைகளை மேலும் செம்மைப்படுத்தி, அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் அவர்களைச் சென்று சேரும் வகையிலும், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்திடவும், திராவிட மாடல் ஆட்சியின் மற்றுமொரு மைல்கல்லாக “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் கோயம்புத்தூரில் தொடங்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து நாமக்கல் நகராட்சி, துறையூர் சாலை, நகராட்சி மண்டபத்தில் நகராட்சி வார்டு எண்: 14, 15, 27, 28, 29, 30, 31, 32 ஆகிய பகுதிகளுக்கு நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன் தலைமை தாங்கினார். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் பார்வையிட்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் முன்னிலை வகித்தார்.

இம்முகாமில் நாமக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் தெரிவித்ததாவது, மக்கள் நலன் பெற வேண்டும். அரசின் திட்டங்களை பெற்று அவர்களின் வாழ்வு உயர வேண்டும். எந்த சூழ்நிலையிலும் அரசின் திட்டங்கள் கால தாமதமின்றி சென்றடைய வேண்டும் என்பது முதலமைச்சர் கனவாகும். அதனடிப்படையில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் இன்றையதினம் தமிழ்நாடு முழுவதும் தொடங்கி வைத்துள்ளார்.நாமக்கல் மாவட்டத்தில் "மக்களுடன் முதல்வர்" திட்டம் இன்று (18.12.2023) துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று முதல் 29.12.2023 வரை ஒன்பது நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 03.00 மணி வரை (அனைத்து வேலை நாட்களிலும்) நாமக்கல், இராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் ஆகிய 5 நகராட்சிகள், 19 பேரூராட்சிகள் ஆகிய இடங்களில் மொத்தம் 41 முகாம்கள் நடைபெற உள்ளது.

இதில் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு தங்கள் துறைக்குட்பட்ட மனுக்களுக்கு 30 நாட்களுக்குள் தீர்வு காணும் வகையில் இந்த முகாம்கள் நடைபெற உள்ளது. பொதுமக்களிடம் வரவேற்பு பகுதியில் பெறப்படும் மனுக்கள் இத்திட்டத்திற்கென உருவாக்கப்பட்ட பிரத்யேக இணைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உடனடியாக ஒப்புகை சீட்டு வழங்கப்படும். இத்திட்டத்தின் பெறப்படும் மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு மீது 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்.பி தெரிவித்தார். இம்முகாமில் நாமக்கல் நகர்மன்ற தலைவர் து.கலாநிதி, துணை தலைவர் செ.பூபதி, வருவாய் கோட்டாட்சியர் நாமக்கல் மா.க.சரவணன், நாமக்கல் நகராட்சி ஆணையாளர் சென்னுகிருஷ்ணன், நாமக்கல் வட்டாட்சியர் சக்திவேல், நகர்மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News