ஜெயங்கொண்டத்தில் குழந்தைகளுக்கு டயபர் நாப்கின் வழங்கும் நிகழ்ச்சி

பண்பாடு மற்றும் விளையாட்டு வார விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு டயபர் நாப்கின் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

Update: 2024-04-09 13:03 GMT
குழந்தைகளுக்கு நாப்கின் வழங்கல்

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வட்டார வளமயத்திற்கு உட்பட்ட தீவிர குறைபாடு உடைய மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு டயப்பர் மற்றும் நாப்கின் வழங்கும் நிகழ்வும் மற்றும் வட்டார அளவிலான பண்பாடு மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) சுவாமி முத்தழகன் தலைமை வகித்தார். ஜெயங்கொண்டம் வட்டார கல்வி அலுவலர்கள் மதலைராஜ் ,ராசாத்தி, ஆண்டிமடம் வட்டார கல்வி அலுவலர் நெப்போலியன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

முன்னதாக ஜெயங்கொண்டம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ)கண்ணதாசன் அனைவரையும் வரவேற்றார். தீவிர குறைபாடு உடைய மாற்றுத்திறனாளி குழந்தைகளை ஆரோக்கியமாக பராமரிக்கும் நோக்கத்தில் 34 தீவிர குறைபாடு உடைய மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மூன்றாம் கட்டமாக டயபர் மற்றும் நாப்கின் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் மற்றொரு நிகழ்வாக, ஜெயங்கொண்ட வட்டார அளவில் 1-5 ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பண்பாடு மற்றும் விளையாட்டு போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி மாவட்ட கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன் மாணவர்களை வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில் ,

ஆசிரியர் பயிற்றுநர்கள் ஐயப்பன் ,அந்தோணி சேவியர் , சுகன்யா மற்றும் சிறப்பாசிரியர்கள் ரூபி பௌலா,பிரேம் குழந்தை , ஹில்டா மேரி மற்றும் லில்லி தெராஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார ஒருங்கிணைப்பாளர் சுகன்யா நன்றி கூறினார்.

Tags:    

Similar News