விவசாயிகளின் கண்ணீரை திமுக ஒரு போதும் மதிப்பதில்லை: ஜி.கே.வாசன்

விவசாயிகளின் கண்ணீரை திமுக ஒரு போதும் மதிப்பதில்லை என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-04-05 10:56 GMT
ஜி.கே வாசன் பிரச்சாரம்

 தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன். சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பி.கார்த்தியாயினியை ஆதரித்து, அரியலூர் மாவட்டம், திருமானூரில் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட பிரசாரத்தில் பேசியது, நடைபெறவுள்ள இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நல்லரசாக செயல்பட்டு வரும் மத்திய அரசை வல்லரசாக கொண்டு வர மோடியை 3 ஆவது முறையாக பிரதமராக்க வேண்டும். போட்டியிடும் வேட்பாளர் கார்த்தியாயினி,

எந்த கௌரவமும் பார்க்காமல் மக்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டு வருவார். ஆனால் இங்குள்ள மக்களவை உறுப்பினர் திருமாவளவன் மத்தியில் உள்ள கட்சியை எதிர் கட்சியாகவே பார்க்கிறார். இதனால் இந்த தொகுதியில் எந்த வளர்ச்சித் திட்டப் பணிகளையம் அவர் மேற்கொள்ளவில்லை.

இந்த தொகுதியை படிப்படியாக வளர்ச்சி பாதைக்கு கொண்டு வந்தவர்கள் ஜி.கே.மூப்பனார், டி.கே.சுப்பையா என்பதை யாரும் மறக்க முடியாது. பெண்களின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சி என பிரதமர் மோடி பணியாற்றி வருகிறார். தமிழகத்தின் வளர்ச்சியில் பெரும் பங்கு மத்திய அரசுக்கு உண்டு. தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு 37 ஆயிரம் வீடுகள் கட்டப்படுள்ளது என்றால் அதற்கு முழு காரணம் மத்திய அரசு தான்.

தமிழத்தில் பெண்களுக்கு மரியாதை ஏற்படுத்த 62.4 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது.100 நாள் வேலைத் திட்டத்துக்கு ஒரு நாள் கூலி ரூ.319 என உயர்த்தியவர் பிரதமர் மோடி. விவசாயிகளை பாதுகாக்க 15 தவனைகளாக ரூ.30 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், திமுக அரசோ மகளிருக்கு ரூ.1,000 வழங்கி, ஆண்களிடமிருந்து டாஸ்மாக் மூலம் அவற்றை வசூல் செய்கிறது.

அந்த ஆயிரமும் அதுவும் திமுகவை சேர்ந்தவர்களுக்கே அந்த பணம் வழங்கப்படுகிறது. பால் விலை உயர்வு, மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு, பத்திரப் பதிவு வரி உயர்வு என மக்களை வாட்டி வதைக்கிறது. கர்நாடக அரசு காவிரி நீரை தர மறுத்து வருகிறது. விவசாயிகளின் கண்ணீரை திமுக ஒரு போதும் மதிப்பதில்லை. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள திமுக கர்நாடகத்தில் பேசி தண்ணீரை கொண்டு வர வேண்டியதுதானே? கூட்டாட்சி தத்துவத்துக்கு எடுத்துக்காட்டாக கர்நாடக அரசு செயல்பட வேண்டும்.

மீனவர் பிரச்னையில் கச்சத்தீவில் வரலாற்றுப் பிழையை காங்கிரஸ் செய்துள்ளது. அதற்கு திமுக துணை சென்றது. அதற்கு மீனவர்கள் ஒரு போதும் திமுகவையும், காங்கிரûஸயும் மன்னிக்க மாட்டார்கள். எனவே இந்த தேர்தலில் நீங்கள் அளிக்கும் வாக்கு, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 55 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் மோடியின் வழிகாட்டலின் படி மாற்றம் ஏற்படும். வேட்பாளர் கார்த்தியாயினியை வெற்றிப்பெற செய்தால் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை,

புள்ளம்பாடி வாய்க்கால் மற்றும் ஏரிகள் தூர்வாரப்படும். திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் கூடுதலாக ஒரு பாலம் கட்டப்படும் என்றார். பிரசாரத்தின் போது பாஜக மாவட்டத் தலைவர் அய்யப்பன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் நடராஜன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News