முதல்வரிடம் புயல் நிவாரண தொகையை வழங்கிய கொமதேக பொதுச்செயலாளர்
மிக்ஜம் புயல் நிவாரண தொகையை முதல்வர் ஸ்டாலினிடம், கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வழங்கினார்.;
Update: 2023-12-13 10:08 GMT
மிக்ஜம் புயல் நிவாரண தொகையை முதல்வர் ஸ்டாலினிடம், கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வழங்கினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டோருக்கு கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பாக ரூபாய் பத்து லட்சம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ அவர்கள் வழங்கினார். உடன் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் தர்மபுரி அசோகன், மாநில விவசாய அணி இணைச் செயலாளர் J.கிருஷ்ணமூர்த்தி, கோவை தெற்கு மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி நித்தியானந்தன், சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் TKS ரமேஷ், சென்னை மாவட்ட செயலாளர் இசை பாலு, தருமபுரி மாவட்ட பொருளாளர் T.ரமேஷ் மற்றும் பொள்ளாச்சி விவேக் இருந்தனர்.!