மாடு திருடியவர் போலீசார் கைது செய்தனர்
பசுமாட்டை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்;
Update: 2023-12-18 05:17 GMT
மாடு திருடியவர் கைது
வரஞ்சரம் அடுத்த நின்னையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன், 59; கடந்த 15ம் தேதி இரவு 7:00 மணியளவில் நாராயணன் தனக்கு சொந்தமான 3 பசு மாடுகளை நிலத்தில் உள்ள கொட்டகையில் கட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். தொடர்ந்து நேற்று முன்தினம் அதிகாலை 5:00 மணியளவில் சென்று பார்த்தபோது, ஒரு மாட்டைக் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து நாராயணன் அளித்த புகாரின் பேரில், வரஞ்சரம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த எடச்சித்துாரைச் சேர்ந்த பூமாலை, 56; மாட்டை திருடியது தெரிந்தது. உடன் பூமாலை மீது வழக்குப் பதிந்து, கைது செய்து பசுவை மீட்டனர்.