வட்டக்கோட்டைக்கு 14 ஆயிரத்து 383 பேர் உல்லாச படகு சவாரி.
வட்டக்கோட்டைக்கு 14 ஆயிரத்து 383 பேர் உல்லாச படகு சவாரி செய்துள்ளனா்;
By : King 24x7 Website
Update: 2023-12-31 17:41 GMT
வட்டக்கோட்டைக்கு 14 ஆயிரத்து 383 பேர் உல்லாச படகு சவாரி.
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் நிறுவப்பட்டுள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் படகில் சென்று பார்த்து வருகின்றனர். கடந்த ஆண்டு விவேகானந்தர் நினைவு மண்டபத்தை 17 லட்சம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டுள்ளனர். இந்த ஆண்டில் 21 லட்சத்தி 70 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கடலில் சென்று பார்வையிட்டுள்ளனர். கடந்தாண்டை விட இந்த ஆண்டு 4 லட்சத்து 70 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கூடுதலாக பார்வையிட்டுள்ளனர். இது தவிர கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு கடந்த மே மாதம் முதல் உல்லாச படகு சவாரி தொடங்கப்பட்டுள்ளது. இந்த எட்டு மாதங்களில் 14 ஆயிரத்து ,383 பேர் வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி செய்துள்ளனர் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது