பாபநாசம் அகஸ்தியர் அருவி

Update: 2024-04-13 10:54 GMT

அகஸ்தியர் அருவி

மலைகள் மற்றும் பசுமையான காடுகளால் சூழப்பட்ட பாபநாசத்தில் 120 மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுகின்றன இந்த நீர்வீழ்ச்சி .இது தாமிரபரணி நதியில் இருந்து பிறக்கிறது . இது மேற்கு தொடர்ச்சி மலையாய் ஒட்டிபாபநாசம் சமவெளியை நோக்கி ஓடுகிறது பாபநாசம் பாவங்களை கழுவுகிற புன்னியஸ்தலமாக கருதப்படுகிறது . இங்குள்ள புனித நீரில் நீராடினால் அனைத்து பாவங்களும் நீங்கும் என்பதை நம்பிக்கை.

இந்த இடம் சுற்றுலா பயணிகளுக்கும் மற்றும் யாத்திரிகர்களுக்கும் பிரபலமான மற்றும் விருப்பமான இடமாக உள்ளது. 3- கிலோ மீட்டர் பயணம் பாபநாசம் நீர்வீழ்ச்சிக்கு உங்களை அழைத்து செல்லும் காடுகளுக்கு அருகாமையில் இருப்பதால் சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளை அடிக்கடி கண்டுகளிப்பார்கள் மற்றும் இந்த இடம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு அருகில் அமைந்துள்ளது இந்த இடம் புராணங்களின் சுவடுகளில் நிறைந்துள்ளது

Advertisement

அகஸ்திய முனிவர் திரளான கூட்டம் காரணமாக சிவன் மற்றும் பார்வதியின் தெய்வீக திருமணத்தை காணமுடியாமல் போன போது அவரின் பார்வையைப் பெற பிரார்த்தனை செய்தார் என்று நம்பப்படுகிறது அவரது பக்தியால் சலனமடைந்த இறைவன் பார்வதியுடன் திருமண அலங்காரத்தில் அவர் முன் தோன்றியதால் அந்த இடம் பாபநாதர் என்று அழைக்கப்பட்டது இந்த இடத்தின் புனித தன்மையும் இயற்கை காட்சி அமைப்பும் இதை எப்போதும் விரும்பத்தக்கதாக ஆக்குகிறது.

Tags:    

Similar News