குளு குளு குற்றாலம்..!

Update: 2024-03-08 11:41 GMT

குற்றாலம்

நெல்லை மாவட்டத்தில் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக குற்றாலம் விளங்குகிறது. இங்குள்ள நீர்வீழ்ச்சியில் நீராட தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநில மக்களும் சீசன் நேரத்தில் குவிகின்றனர். குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி, செண்பக அருவி, புலி அருவி, பழைய குற்றாலம் அருவி, பழத்தோட்ட அருவி, தேனருவி, சிற்றருவி, புது அருவி, போன்ற ஒன்பது அருவிகள் உள்ளன.

இவற்றில் நீராடுவது உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்வு தருகிறது. இந்த நீரில் மூலிகைகளின் குணம் இருப்பதால் மன நோய்க்கு மருந்தாக அமைவதாக கூறுவது உண்டு . ஆகஸ்ட் மாதம் அருவிகளில் நீர்வரத்து அதிகம் இருக்கும். தாமிர சபையும் இங்குதான் உள்ளது மங்குஸ்தான், ராம் தான் போன்ற மலைகளில் இருந்து கிடைக்கும் பழங்கள் சீசன் நேரத்தில் கிடைக்கும்.

செண்பகா தேவி அருவி

பேரருவியில் இருந்து மலையில் இரண்டு கிலோ மீட்டர் நடைபயணத்தில் செண்பகாதேவி அருவி அடையலாம் இந்த அருவி தேனருவியில் இருந்து இரண்டரை கி.மீட்டர் கீழ்நோக்கி ஆறாக ஓடி வந்து 30 அடி உயரத்தில் அருவியாக கொட்டுகிறது. அருவிக்கரையில் செண்பகாதேவி அம்மன் கோவில் உள்ளது .சித்ரா பௌர்ணமி நாளில் இந்த கோவிலின் சிறப்பான விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தற்பொழுது இந்த அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேனருவி

செண்பகாதேவி அருவியின் மேல் பகுதியில் தேன் அருவி உள்ளது இந்த அருவி அருகே பல தேன் கூடுகள் அமைந்துள்ளதால் இந்த இடம் அபாயகரமானது இந்த அருவிக்குச் சென்று குளிப்பதற்கு தடைக்காலம் அவ்வப்போது பிறப்பிக்கப்படும்

ஐந்தருவி

குற்றாலத்தில் இருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் ஐந்தருவி உள்ளது.திரிகூடமலையின் உச்சியில் இருந்து 40 அடி உயரத்திலிருந்து உருவாகி சிற்றாட்டின் வழியாக ஓடிவந்து ஐந்து கிளைகளாக பிரிந்து விழுகிறது இதில் பெண்கள் குளிக்க இரு அருவிக்கிளைகளும் ஆண்கள் குழந்தைகளுக்கு மூன்று கிளைகளும் உள்ளன இங்கு சபரிமலை சாஸ்தா கோயிலும் முருகன் கோயிலிலும் உள்ளன. இங்கு தோட்டக்கலைத் துறையினரால் பூஞ்செடிகளும் மரக்கன்றுகளும் விற்கப்படுகின்றன புலியருவி- குற்றாலத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சிறுவர்கள் குளிக்க புலி அருவி மிகவும் பாதுகாப்பானது.

Tags:    

Similar News