விசா இல்லாம குறைந்த பட்ஜெட்டில் சுற்றுலா போகனுமா ? அப்போ வாங்க போகலாம் !!!

Update: 2024-09-13 12:20 GMT

சுற்றுலா

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

வாழ்க்கையில் ஒரு முறையாவது ஏதாவது ஒரு வெளிநாட்டுக்காவது போயிட்டு வந்துடணும்பா என்று நினைப்பவர்கள் ஏராளம். ஆனால் வெளிநாடு போக வேண்டும் என்றால் விசா எடுக்கணும், லட்ச கணக்கில் செலவாகும் என்று நினைத்துக்கொண்டு அதில் ஆர்வம் காட்டாமல் பலரும் இருப்பதுண்டு.குறைந்த பட்ஜெட்டில் இந்த 6 நாடுகளுக்கு விசா இல்லாமலே போயிட்டு வந்துடலாம்.

சமோவா:


குட்டி தீவு நாடான சமோவா சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த நாடுகளில் ஒன்றாக உள்ளது. ஹவாய் மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு இடையே இந்த நாடு இருக்கிறது.ந்த நாட்டுக்கு விசா இல்லாமல் 90 நாட்கள் வரை தங்கியிருக்க முடியும்.இந்த நாட்டில் உள்ள கலாச்சாரம் கடற்கரைகள் சுற்றுலா பயணிகள் விரும்பி ரசிக்கும் இடமாக உள்ளது.

பார்படோஸ்: 


கரீபியன் தீவு நாடுகளில் ஒன்றே பார்படோஸ். இந்தியர்கள் விசா இன்றி இந்த நாட்டிற்கு சென்று வர முடியும். அதுவும் ஒருமாதம் அல்ல இரண்டு மாதம் அல்ல, ஆறு மாதங்கள் வரை விசா இன்றி அந்த நாட்டில் தங்க முடியும்.

நேபாளம்: 


இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த நாடு இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளை கொண்டது.இந்தியாவில் இருந்து இந்த நாட்டிற்கு ரயில் போக்குவரத்தே உள்ளது. பாஸ்போர்ட் கூட இல்லாமல் இந்த நாட்டிற்கு இந்தியர்கள் சென்று வர முடியும். விசா எதுவும் தேவையில்லை. ஆனால் இந்தியாவில் வசிக்கிறோம் என்பதற்கான இந்திய குடிமகன் என்ற அடையாள ஆவணம் கட்டாயம் ஆகும்.

பூடான்: 


இந்த நாடு தனது பெரும்பாலான நிலப்பகுதி எல்லையை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்கிறது. இந்தியர்கள் இங்கு செல்ல வேண்டும் என்றால் விசா எதுவும் தேவையில்லை. ஆதார் உள்ளிட்ட இந்தியாவின் அடையாளச் சான்று ஏதேனும் ஒன்றைக் காண்பித்து அந்த நாட்டிற்கு சென்று வரலாம். நீண்ட காலம் தங்குவது என்றால் அந்த நாட்டில் உள்ள அதிகாரிகளிடம் அனுமதி பெறுவது அவசியம் ஆகும்.

மாலத்தீவு: 


நூற்றுக்கணக்கான தீவுக் கூட்டங்களை உள்ளடக்கிய இந்த நாடு சுற்றுலாத் துறையை பெரிதும் சார்ந்துள்ளது. இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளின் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இந்த நாட்டிற்கு அடிக்கடி செல்கிறார்கள். இந்தியாவுக்கு மிக நெருக்கமாக உள்ள நாடுகளில் இதுவும் ஒன்று. இங்கு நாம் விசா இல்லாமலே செல்ல முடியும்.

மொரிஷியஸ் தீவுகள்: 


அடர்ந்த வனப் பரப்புகள் மற்றும் தீவுக் கூட்டங்கள் ஆகியவை இந்த நாட்டில் நிறைந்து காணப்படுகின்றன.சுற்றுலாவிற்கு செல்லும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை. எனினும் தொழில் காரணங்களுக்காகவும், நீண்ட காலம் அந்த நாட்டில் தங்குவதற்காகவும் சென்றால் விசா பெறுவது அவசியம் ஆகும்.

Tags:    

Similar News