தாரமங்கலம் கைலாசநாதர் கோயில்!
சேலத்தில் இருந்து 24 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இங்குள்ள கைலாசநாதர் கோயில் ஒரு சிற்றரசரால் கட்டப்பட்டது ஊரின் நடுவே கோயில் மேற்கு நோக்கி 5 நிலைகள் கொண்ட இராச கோபுரத்தின் ஏழு கலசங்களும் சுமார் 375 கதை சிற்பங்களும் அமைந்து விளங்குகின்றன திருக்கோயிலுனுள்ளே முன் மண்டப எட்டு தூண்கள் சிற்பக்கலை வடிவங்களாகவே திகழ்கின்றன முதல் தூணும் கடைசி தூணும் தளர்ந்து வளைந்து உள்ளவை போன்று அமைக்கப்பெற்றுள்ளன தூண்களில் யானை மீதும் இரு குதிரைகள் மீதும் வீரர்கள் இருப்பது போன்ற அமைக்கப்பட்டுள்ளன யானையின் வாய்க்குள் கல் உருண்டை உள்ளது ஆனால் அதனுள் கை நுழையாது விரல்கள் செல்லும் இடைவெளி உண்டு இக்கோயில் உள்ள இறைவனை சந்திரனும் சூரியனும் வந்து தொழுது செல்வதாக கூறப்படுகிறது ஆண்டு தோறும் உத்திராயண தட்சாயண புண்ணிய காலங்களில் மாலை வேலையில் சூரியன் கதிர்களும் சந்திரன் ஒளியும் சிவலிங்கத்தின் மீது படுகின்றன அதாவது சூரிய ஒளி மூலஸ்தான சிவலிங்க மூர்த்தி மேல் விழுவதை சூரியபூஜை என்று கூறுவர் சூரியனுடைய கதிர்கள் ராஜகோபுர வாயிலின் வழியே வந்து நந்தி மண்டபத்தின் ஊடே புகுந்து பின் மூன்று உள் வாயிலையும் கடந்து சிவலிங்கத்தின் மேல் படுவது அபூர்வமாக கருதப்படுகிறது. சந்திரனுக்கும் சூரியனுக்கும் தாரகாபதி, தாரகன் என்ற பெயர்கள் இருப்பதால் தாரமங்கலம் என்ற பெயர் உண்டாயிற்று என்றும் கூறுவார்கள்.