கனமழை காரணமாக குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிப்பு !!

Update: 2024-11-16 06:25 GMT
கனமழை காரணமாக குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிப்பு !!

Koortalam Falls

  • whatsapp icon

தென்காசி மாவட்டத்தில் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தென்காசி, வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

அதன்படி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பரவலான மழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் மிதமான மழை பெய்தது.

பின்னர் மாலையில் இடி, மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக இரவு நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து மழை பெய்தது.

தொடர் மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளிலும் நீர்வரத்து அதிகமாகும் என்ற நிலையில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி குளிப்பதற்கு தடை அறிவித்துள்ளனர்.

மேலும் அருவிக்கரை பகுதிகளில் பாதுகாப்பிற்காக கூடுதல் போலீசார் காவலில் உள்ளனர். நீர்வரத்து சீரான பின்னர் அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் தொடர் மழையால் திருக்குறுங்குடி நம்பியாற்றில் நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில் மலையில் உள்ள நம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News