குமரியின் சிறப்புகள் !

Update: 2024-03-06 10:52 GMT

குமரியின் சிறப்புகள் !

முக்கடலும் சங்கமிக்கும் இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரி ஆரம்பகாலத்தில் சேர சோழ பாண்டிய மற்றும் நாயக்க மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது." வட வேங்கடம் முதல் தென்குமரி வரையுள்ள பகுதி தமிழ் கூறும் நல்லுலகம்" என்று தொல்காப்பியத்திற்கு சிறப்பு பாயிரம் வழங்கிய பணம் பாரனார் குறிப்பிடுகிறார். மதுரை தொடங்கி குமரி வரை உள்ள பகுதி பாண்டிமண்டலமாக பாண்டியர்களால் ஆளப்பட்டு வந்ததற்கு சான்றாக அழகிய பாண்டியபுரம் பாண்டியன் அணை பாண்டியன் கால்வாய் என்ற பெயர்கள் அடங்கிய ஊர்கள் இங்கு உண்டு .பின்னர் இது புறத்தாயநாடு நாஞ்சில் நாடு வேணாடு என்று மூன்றாக திகழ்ந்தது முக்கடல் சங்கமிக்கும் குமரியில் சூரிய உதயம் சூரிய அஸ்தமனம் ஆகிய இயற்கை அழகை நேரடியாக பார்க்கலாம் தமிழ்நாட்டின் கல்வி அறிவில் முதலிடம் பெற்ற மாவட்டம் இந்த மாவட்டம் .

மீன் பிடித்தல் குமரியில் பிரதான தொழிலாகும் இங்குள்ள தூத்தர் மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சுறா வேட்டைக்கும் ஆழ்கடல் மீன் பிடிப்பிற்கும் பிரசித்தி பெற்றவர்கள். வயல்கள் அதிகம் கொண்டதால் நாஞ்சில் நாடு என்று அழைக்கப்படுகிறது நாஞ்சில் என்ற சொல்லுக்கு கலப்பைஎன்று அர்த்தமாகும் .நெல் தேங்காய் ,ரப்பர் தேயிலை உற்பத்தியில் முக்கிய பங்கு வைக்கிறது . மரவள்ளி கிழங்கு உற்பத்தியில்கன்னியாகுமரி முதலிடமும் சேலம் மாவட்டம் இரண்டாம் இடமும் பெறுகிறது. தமிழகத்தில் தர்மபுரி மாவட்டத்திற்கு அடுத்து அடர்ந்த வனப் பகுதி கொண்ட மாவட்டம் இதுதான் கடற்கரை மணல் பல வண்ணங்களில் காணப்படுகிறது. டைட்டானியம் தோரியம் மோனோசைட் ஆகியவை இந்த மாவட்ட கடற்கரை மணலில் காணப்படும் கனிமங்கள். ரப்பர் தொழிற்சாலைகள் உப்பு பதனிடுதல் விசைப்படகு (ம) எந்திர படகு கட்டுதல் காற்றாலைகள் சர்க்கரை வள்ளி கிழங்கிலிருந்து மைதா தயாரித்தல் பிளாஸ்டர் தொழிற்சாலை போன்றவை இம் மாவட்டத்தின் முக்கிய தொழிற்சாலைகள்.இம் மாவட்டம் பல அரிய மூலிகை வகைகளையும் தாதுவளங்களையும் தாங்கும் மலைகளையும் கொண்டுள்ளது கன்னியாகுமரிக்கு அருகில் அமைந்திருக்கும் மருந்துவாழ் மலை அசோகர் காலகட்டத்தில் வாழ்ந்த புத்த பிக்குகளால் மருத்துவம் மற்றும் ஆன்மீக பாரம்பரியம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் இம்மலை ராமருக்கும் ராவணனுக்கும் இடையில் நடந்த காப்பிய யுத்தத்தின் போது அனுமன் சுமந்து சென்ற காந்த மதனாமலையின் உடைந்து விழுந்த பகுதியாக இதன் புராணக் குறிப்பு கூறுகிறது.

இம்மலையில் பல அரிய வகை மூலிகைகள் அதிக அளவில் உள்ளன .செந்தமிழின் முதல் இலக்கண ஆசிரியரும் முதல் சித்தருருமான அகத்தியர்இந் நிலப்பரப்பின் எல்லையில் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. இன்றும் இந்த வர்ம வைத்திய முறைகள் கன்னியாகுமரி பகுதிகளில் குரு -சிஷ்யமுறையில் கற்பிக்கப்படுகிறது மேலும் இந்த தமிழ் வைத்திய முறையை பயன்படுத்தி இத் துறையின் வல்லுனர்களால் மருத்துவம் செய்யப்படுகிறது.

Tags:    

Similar News