கூந்தன் குளம் பறவைகள் காப்பகம் !

Update: 2024-04-22 10:30 GMT

பறவைகள் காப்பகம்

தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி அருகே உள்ள சிறிய கிராமம் கூந்தன் குளம். இது 1994 ஆம் ஆண்டு பறவைகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. இக்காப்பகத்திற்கு 43 -இனத்தைச் சேர்ந்த பறவைகள் வருகின்றன. கூத்தன் குளம், காடன்குளம் என இயற்கையாக அமைந்துள்ள நீர் பரப்பில் 129.33 ஏக்கரில் பறந்து விரிந்துள்ள பறவைகள் புகலிடத்தில் பூநாரைகளின் வரவு அதிகமாக இருக்கும். கூந்தன்குளம் கிராம மக்களின் அரவனைப்பில் பறவைகள் யாவும் மனிதர் பயம் இன்றி அணைத்து வீடுகளின் மரங்களிலும், கூடுகள் அமைத்து முட்டையிட்டு குஞ்சுகளை பாதுகாத்துக் கொள்கின்றனர். நீண்டு மெலிந்த சிவந்த கால்களையும் மெல்லிய குழல் போன்ற வளைந்த கழுத்தையும், ரோசாவண்ணத்தையும், ஒத்த பூநாரைகள் இங்கு வந்து செல்வது மிகவும் குறிப்பிடத்தக்கது. இந்த பறவைகள் சரணாலயம் விரைவில் பிரபலமான நீர்வாழ் பறவைகளுக்கான சரணாலயங்கள் வரிசையில் சேர்க்கப்பட உள்ளது. சுமார் 35 வகையான பறவைகள் இங்கு வந்து செல்கின்றன. பறவைகளின் இனப்பெருக்கத்திற்கு இந்த கிராமம் மிகவும் அமைதியானதாகவும் நல்ல சீதோசன நிலையும் இருப்பதால் பறவைகள் இங்கு வருகின்றன. ஆண்டுதோறும் டிசம்பர் மாத இறுதியில் வெளிநாடுகளில் இருந்து இடம் பெயர்ந்து வரும் பறவைகள் முட்டையிட்டு குஞ்சு பொறித்த பின் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் திரும்பிச் செல்கின்றன.

Tags:    

Similar News