குற்றாலம் திற்பரப்பு அருவியில் வரத்து குறைவு:சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

குமரியின் குற்றாலம் திற்பரப்பு அருவியில் தண்ணீர் வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

Update: 2024-03-11 13:45 GMT

அருவியில் நீர்வரத்து குறைவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் குமரி குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

திற்பரப்பு அருவியில் தண்ணீர் வரத்து குறைந்ததை தொடர்ந்து சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்துள்ளது. திற்பரப்பு அருவியில் கடந்த சில வாரங்களாக அருவியின் அனைத்து பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் குளித்து செல்லும் அளவிற்கு தண்ணீர் கொட்டியது.

இதனால் சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகளவு காணப்பட்டது. தற்போது கடந்த இரண்டு நாட்களாக அருவியில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. அருவியின் ஒரு சில பகுதிகளில் சிறிதளவு தண்ணீர் கொட்டுகிறது.

மழை பெய்யாததும், கோதையாற்றில் இருந்து அதிகளவு தண்ணீரை களியல் பகுதியில் இருந்து குடிநீர் திட்டத்திற்காக உறிஞ்சப்படுவதாலும் அருவியில் தண்ணீர் வரத்து குறைய காரணமாகிறது. இதனால் திற்பரப்பு அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்

Tags:    

Similar News