மாஞ்சோலை மலைச் சுற்று !
மாஞ்சோலை திருநெல்வேலி மாவட்டத்தில் மணிமுத்தாருக்கு அருகில் இருக்கும் ஒரு மலை சுற்றுலாத்தலமாகும். இயற்கை எழில் மிகுந்த இடமாகும் .திருநெல்வேலியில் இருந்து 57 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இவ்விடத்தை 3 மணி நேரத்தில் அடையலாம்.
ஒரு சிறிய அழகிய மலைவாழ் கிராமம் தான் மாஞ்சோலை களக்காடு முண்டத்துறை புலிகள் சரணாலயம் மற்றும் மேல் கோதையாருக்கு அருகில் கடல் மட்டத்திலிருந்து ஏறக்குறைய 3500 அடி உயரத்தில் இந்த அழகிய சிறு கிராமம் அமைந்துள்ளது. தேயிலை தோட்டங்கள் நீர்வீழ்ச்சிகள் அணைக்கட்டுகள் மற்றும் பசுமை மாற மேற்கு தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டுள்ள இந்த சிறு கிராமத்திற்கு நீங்கள் சென்று வாருங்கள் மாஞ்சோலை என்ற பெயரை பலமுறை நாம் கேள்விப்பட்டிருப்போம்.
இங்கே நிலவும் அழகிய வானிலைக்காகவே இங்கு பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இது பொதுமக்களிடையே அவ்வளவு பிரபலமா என்று யோசித்தால் அதுதான் இல்லை அதற்காகவே தான் இந்த பதிவு களக்காடு முண்டத்துறை புலிகள் சரணாலயம் உள்ள அமைந்திருக்கும்.
இந்த சிறு அழகிய கிராமத்தைச் சுற்றி ஏராளமான இடங்கள் உள்ளன கிராமத்தின் இடமும் மிதமான காலநிலை உங்களை தொட்டு செல்லும் மேகங்கள் எங்கு பார்த்தாலும் உலாவும் மயில்கள், லேசான சாரல் துளிகள் என உங்களது மனதும் உடலும் புத்துணர்ச்சி பெறுவதை நீங்கள் நிச்சயம் உணர்வீர்கள்.
டார்சன் குளம் காக்காச்சியில் உள்ள மினிகோல்ப் மைதானம் காக்காச்சி ஏரி குதிரை வெட்டி குட்டியார் அணை மணிமுத்தாறு . மாஞ்சோலை தேயிலை எஸ்டேட் நாலு மூக்கு சிங்கம்பட்டி ஜமீன் அரண்மனை வானப்பெட்சி அம்மன் கோயில் மணிமுத்தாறு அருவி மேல்கோதையார் அணை ஆகியவை மாஞ்சோலை பகுதியில் உள்ள சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் இடங்கள் ஆகும்.