மலை பிரேதேச சுற்றுலா செல்ல பிளானா - உங்களுக்கான இடங்கள் தான் !!

Update: 2024-10-21 10:20 GMT

சுற்றுலா

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஹார்ஸ்லி ஹில்ஸ் :


மதனப்பள்ளி அருகே அமைந்துள்ள இந்த ஹார்ஸ்லி மலை குளிர்ச்சியான இதன் சீதோஷன நிலை காரணமாக சுற்றுலா பயணகளை வெகுவாக ஈர்த்து வருகிறது. உயிரியல் பூங்கா, காலிபந்தலு காற்று பாறைகள், சென்னகேசவா கோவில், தலகோனா மற்றும் துமுகுரலு அருவிகள், கங்கோத்ரி நதி, மல்லம்மா கோவில், விஸ்பர் விண்ட் பாயிண்ட் உட்பட ஏராளமான வியூ பாயிண்ட்கள் உள்ளன.

நல்லமலா ஹில்ஸ் :


ஆந்திராவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில், கிழக்குத்தொடர்ச்சி மலை மீது அமைந்துள்ள நல்லமலாவில், ஆசியாவிலேயே மிகவும் பழமைவாய்ந்த, மனிதரால் கட்டமைக்கப்பட்ட கம்பம் நதி பாய்கிறது. இயற்கை விரும்பிகளின் புகழிடமான இதுவே ஆந்திராவின் மிகப்பெரிய வனப்பகுதியாகும். 

லம்பாசிங்கி :


அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் உள்ள இந்த சிறிய மலைக்கிராமம், ஆந்திராவின் காஷ்மீர் என்றழைக்கப்படுகிறது. கடல்மட்டத்தில் இருந்து ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும் இங்கு தேயிலை, காபி, ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி தோட்டங்கள் நிறைந்துள்ளது. தென் இந்தியாவிலேயே பனிப்பொழிவு இருக்கும் ஒரே இடம் இது மட்டும் தான்.

அரக்குவேலி :


விசாகப்பட்டினம் அருகே கிழக்குத்தொடர்ச்சி மலைத்தொடர் மீது அமைந்துள்ள இந்த அரக்கு பள்ளத்தாக்கிற்கு, ஆந்திராவின் ஊட்டினு கூட ஒரு பேரு இருக்கு. காபி தோட்டங்கள் சூழ, ஊட்டி போலவே காட்சிதரும் அரக்கு பள்ளத்தாக்குல காபி மியூசியம், டிரைபல் மியூசியம், பத்மபுரம் தோட்டம், கொத்தப்பள்ளி மற்றும் சாப்பரை அருவிகள் என சுத்திப்பார்க்க ஏராளமான இடங்கள் இருந்தாலும் இங்குள்ள போரா குகைகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு ஸ்பாட்.

மருதுமில்லி : 


ராஜமுந்திரியில் இருந்து என்பத்தி ஏழு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள மருதுமில்லி இயற்கையை விரும்புபவர்களுக்கு மிகவும் ஏற்ற ஒரு இடமாகும். நீர் வீழ்ச்சிகள் அருகே கேம்ப் அமைத்தல், ட்ரெக்கிங் போன்ற வசதிகள் இருப்பதால் வார இறுதி நாட்களில் இங்கு மக்கள் அதிகளவில் வருகை தருகின்றனர்.

Tags:    

Similar News