கல்வராயன் கொண்ட கள்ளக்குறிச்சியின் சிறப்புகள் !

Update: 2024-03-25 13:01 GMT

கல்வராயன் மலை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் கல்வராயன் மலையானது கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரின் ஒரு பகுதியாகும். மேலும் பச்சை மலை ஜவ்வாது மற்றும் சேர்வராயன் மலைகள் ஆகியவற்றுடன் இவை காவேரி ஆற்று வடிநிலத்தை பாலாற்றின் வடிநிலத்தில் இருந்து பிரிக்கும் எல்லைகளாக அமைந்துள்ளன. கல்வராயன் மலையின் வட பகுதி சின்ன கல்வராயன் மலை என்றும் தென்பகுதி பெரிய கல்வராயன் மலை என்றும் அழைக்கப்படுகிறது. மணியாறு மற்றும் முக்தா ஆறு இணையும் இடத்தில் மணிமுக்தா அணை கட்டப்பட்டுள்ளது. இம்மலையில் தான் கோமுகி நதி உற்பத்தியாகி அந்நதியின் குறுக்கே கோமுகி அணை கட்டப்பட்டுள்ளது .கோமுகி அணையை சுற்றி 15 ஏக்கர் நிலப்பரப்பில் அழகிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகள் நீராட மேகம் பெரியார் மற்றும் புன்னம்பாடி போன்ற அருவிகள் உள்ளன . மலையில் உள்ள ஓடையின் குறுக்கே தடுப்பணைகள் அமைக்கப்பட்டு படகு குழாம் உருவாக்கப்பட்டுள்ளது .இது போன்ற சுற்றுலாப் பயணிகளை கவரும் பல்வேறு அம்சங்கள் இம்மாவட்டத்தில் உள்ளன. இதில் நெல் கரும்பு மற்றும் கடலை எள் மற்றும் காய்கறிகள் போன்ற பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன இதனால் இம்மாவட்டத்தில் கோமுகிசர்க்கரை ஆலை ,மூங்கில் துறை பட்டு சர்க்கரை ஆலை, தியாகதுருகம் சர்க்கரை ஆலை என பல சர்க்கரை ஆலைகளும் நவீன அரிசி ஆலைகள் போன்ற பல தொழிற்சாலைகளும் நிறைந்துள்ளன மேலும் இங்கே அரசின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளிலும் புதிய காடு வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ள மலையோர கிராமங்களிலும் சுவைமிக்க விளாம்பழங்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு வெளியூர்களுக்கு அனுப்பப்படுகின்றன. தாவரங்களின் வளர்ச்சிக்கு ஏற்ற மிருதுவான மண் அமைப்பு கொண்ட கல்விராயன் மலை என்பதே நாளடைவில் கல்வராயன் மலை என அழைக்கப்படுகிறது இம்மலையில் தேக்கு சந்தனம் கடுக்காய் மூங்கில் முந்திரி முதலியவை கிடைக்கின்றன .கள்ளக்குறிச்சி வட்டமே கூடுதலான வளமும் காட்டு வளமும் உடையது சேலம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களின் எல்லையில் 1095 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட கல்வராயன் மலை உள்ளது. இதன் 2700 அடி உயரம் கொண்ட வடக்கு பகுதி சின்ன கல்வராயன் மலை என்றும் நான்காயிரம் அடி உயரம் கொண்ட தெற்கு பகுதி பெரிய கல்வராயன் மலை என்றும் அழைக்கப்படுகிறது.

Tags:    

Similar News