சுயம்புலிங்கமாக சுகனேஸ்வரர்! சேலம் அருகே இப்படி இரு கோவிலா !

Update: 2024-04-10 06:48 GMT

சுகனேஸ்வரர் கோவில் 

சுகவனேஸ்வர் திருக்கோயில் சேலம் நகரத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.

சுகமுனீஸ்வரர் சாப விமோசனம் பெற வேண்டி இறைவனை வேண்டும் வேலையில், வேடன் ஒருவனால் வெட்டப்பட இறைவனைக் காக்கும் பொருட்டு தன் இறக்கைகளில் விரித்து லிங்கத்தை மறைத்த வண்ணம் உயிர் துறந்ததால், இந்த தலம் அவர் பொருட்டு சுகவனேஸ்வரர் கோயில் என்று அழைக்கப்பட்டது.


கி.பி. 7 மற்றும் 8 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த இத் திருக்கோயில் கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம், அந்தராளம், நிருத்த மண்டபம் என ஐந்து அமைப்புகளைக் கொண்டு விளங்குகின்றது. மூன்று நிலை ராஜகோபுரம் ஒரு பிரகாரத்துடன் அமைந்துள்ளது. கல்வெட்டுகளில் கிளிவண்ணமுடைய நாயனார். கிளிவனக் கோயில் பெருமான் அடிகள், கிளி வண்ணத் தேவர் என்னும் திருப்பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன. இலக்கியச் சான்றுகளைக் கொண்டு பார்க்கும்போது இக்கோயிலின் தென்பால் அறுபத்து மூவர் வீற்றிருக்கின்றனர். சுயம்புலிங்கமாக சுகனேஸ்வரர் எழுந்தருளியுள்ளார்.


இக்கோயிலின் தென்மேற்குப் பிரகாரத்தில் கிழக்கு நோக்கியவாறு வலம்புரி விநாயகர் தனித் திருச்சந்நிதி கொண்டு விளங்குகின்றார். வடமேற்குப் பிரகாரத்தில் முருகப்பெருமான் தனித் திருச்சந்நிதியில் எழுந்தருளிக் காட்சி தருகிறார். திருக்கோயிலின் மேற்கு மதிற் சுவரையொட்டித் தென்பால் பஞ்சமுக லிங்கங்களையும், வடபால் சரசுவதி, கஜலட்சுமி ஆகியோரையும் கண்டு வழிபடலாம். இக்கோயிலின் கருவறையின் மேற்குக் 5 கோட்டத்தில் அண்ணாமலையாரையும், வடக்குக் கோட்டத்தில் காளியும், தெற்குக் கோட்டத்தில் தட்சிணாமூர்த்தியும், வடபால் கோமுகத்தை ஒட்டிய 5 சந்நிதியில் சண்டேசுவரரும் உள்ளனர். சேலம் கோட்டை மாரியம்மனும், தேரடி இராஜகணபதியும் சிறந்த வரப்பிரசாதிகளாக விளங்குகின்றனர்.

அண்ணாமலையார் உருவம் ஒரு மரப்பொந்தில் செதுக்கியிருப்பது சிற்பக்கலையின் சிறப்பாகும். இந்த கோயிலில் உள்ள வலம்புரி விநாயகரை வழிபட்டால் பணம் வரவு அதிகரிக்கும் என்பது ஐதீகம்.

Tags:    

Similar News