தூத்துக்குடி துறைமுகம்!
உலகில் சில துறைமுகங்களுக்கு மட்டுமே தரப்பட்டிருக்கும் சர்வதேச தரச் சான்றிதழ் ஐ.எஸ்.ஓ.9002,பிப்ரவரி 1996 இல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரை ஓரத்தில் சென்னைக்கு அடுத்த பெரிய துறைமுகம் தூத்துக்குடி ஆகையால் ,இங்கு ஏற்றுமதி ,இறக்குமதி வாணிகம் சிறந்த கட்டுப்பாட்டில் நடைபெறுகிறது. மன்னர் வளைகுடா அருகே இயற்கை துறைமுகமான தூத்துக்குடி துறைமுகம் அமைந்துள்ளது .இப்பகுதி புயல் அடிக்காத பூகோள அமைப்பை கொண்டுள்ளது.
இத்துறைமுகத்தில் கடல் அரிப்பை தடுக்க ,நீளமான அலை தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இது உலகத்திலேயே அதிக நீளமான அலைத் தடுப்பு சுவர் என்ற பெருமையை பெற்றுள்ளது. மணிக்கு 700- லிட்டர் பெட்ரோலிய எண்ணைய் பொருள்களை இறக்குமதி செய்ய "மெரைன் அன்லோடிங் ஆர்ம்ஸ்" என்ற சிறப்பு கருவிகள் இத்துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு மின்சார வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ள மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கென்றே நிலக்கரி துறையும், மணிக்கு 2000 டன் நிலக்கரி இறக்க 5 கிலோமீட்டர் தொலைவிற்கு தானியங்கியும் உள்ளன. 600 அடி முகத்துவாரத்தோடும் ,ஆறு பக்கவாட்டுத் தளங்களோடும் திகழும் இத்துறை முகம் சரக்குகள் ஏற்றுமதி இறக்குமதி வசதிக்காக 23 கிரேன்களும், 18 போர்க்லிப்ட் கருவிகளும் ,நான்கு பிரம்மாண்டமான சரக்கு லாரிகளும், நான்கு ரயில் இன்ஜினிகளும் சுமார் 50,000 டன்கள் சரக்குகள் வைப்பதற்குரிய பாதுகாப்பு திட்டங்கள் கிடங்குகளும் கொண்டுள்ளது.
1955 இல் இருந்து தூத்துக்குடியில் முத்துக்குளிப்பு சிறப்பாக நடைபெறுகிறது. 2000 பேருக்கு மேல் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். செப்டம்பர் முதல் மே மாதம் வரை முத்துக்குளிப்பில் ஈடுபடுகின்றன. இங்கு எடுக்கப்படும் முத்துக்கள் தரத்துடன் நல்ல எடையை கொண்டதாகும். இதனால் அந்நிய செலாவணி கிடைக்கிறது முத்துக்குளிப்பு நடைபெறாத மாதங்களில் சங்கெடுப்பில் ஈடுபடுகின்றனர். 100 அடி ஆழம் சென்று சங்கு எடுக்கப்படுகிறது. அரசின் நேரடி பார்வையில் சங்கு எடுப்பவர்களும், சங்கு படிந்து கிடக்கும் இடங்களை காட்டுபவர்களும், பணியாற்றுகின்றனர்.உயர்தர சங்கை" ஜாதி சங்கு' என்பார். இது பெரிய அளவில் கிடைக்கிறது. வலம்புரி சங்கு எப்போதாவது கிடைக்கும். இடிந்த கரை ,உவரி, புன்னைக்காயல் முதலிய இடங்களில் இடங்களில் சங்கு எடுக்கப்படுகிறது.