ஷாட்ஸ்

இந்தியாவிலேயே தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்குகிறது: உயர்கல்வி அமைச்சர் கோ.வி.செழியன்

இந்தியாவிலேயே தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்குகிறது என உயர்கல்வி அமைச்சர் கோ.வி.செழியன் தெரிவித்துள்ளார். மாணவர்களின் கல்விக்கு இடையூறு வராமல் முதலமைச்சர் பார்த்துக் கொள்வார் என அமைச்சர் கூறியுள்ளார்.

மனது முழுவதும் வலி நிறைந்துள்ளது: விஜய்

மனது முழுவதும் வலி நிறைந்துள்ளது என கரூர் துயர சம்பவம் குறித்து தவெக தலைவர் விஜய் வீடியோ வெளியிட்டார். வாழ்நாளில் இதுபோன்று ஒரு கடினமான சூழ்நிலையை நான் சந்தித்தது இல்லை. என் மீது வைத்துள்ள பாசத்தால் மக்கள் அதிகளவில் வந்துவிட்டார்கள். மக்கள் என் மீது வைத்துள்ள அன்புக்கும் பாசத்துக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன். மீண்டும் பிரச்சனை ஏற்படும் என்பதால் மக்களை சந்திக்க கரூருக்கு நேரில் செல்லவில்லை. கூடிய விரைவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். த.வெ.க.வுக்கு ஆதரவாக பேசிய அரசியல் தலைவர்கள், நண்பர்களுக்கு நன்றி என்று குறிப்பியுள்ளார்.

நாகரீகமற்று கொச்சையாக பேசியதாக அன்புமணிக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் கண்டனம்!!

நாகரீகமற்று கொச்சையாக பேசியதாக அன்புமணிக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். சொந்த தந்தையை கூட கொச்சைப்படுத்துபவரின் கருத்தை இனிமேல் பொருட்படுத்த தேவையில்லை. கரூர் கூட்ட நெரிசலில் இறந்த குழந்தைகளை என்னுள் ஒருவராகவே கருதுகிறேன். என்னை மக்களில் ஒருவராக கருதுகிறேன்; ஆறுதல் தேடும் கோடி மனங்களில் நானும் ஒருவன். எந்த தலைவரும் தன் ஆதரவாளர் இறப்பதை விரும்பமாட்டார் என்ற முதல்வரின் வழியில் பயணிக்கிறோம். நாங்கள் மக்களின் பக்கம் நிற்கிறோம்; ஆறுதல் தேடுகிறோம், ஆறுதல் சொல்கிறோம் என தெரிவித்தார்.

பசுமை பட்டாசு என்பதே கிடையாது: அன்புமணி

உச்சநீதிமன்றம் கூறும் பசுமை பட்டாசு என்பதே கிடையாது என சிவகாசியில் அன்புமணி தெரிவித்துள்ளார். சிவகாசியில் பட்டாசு தொழிலாளர்கள் உடனான கலந்துரையாடலில் அன்புமணி பேசினார். பசுமை பட்டாசுகளின் தன்மை என்னவென்றே நீதிபதிகளுக்கு தெரியாது என்றும் விமர்சித்தார்.

தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், சென்னை, தென்காசி, நெல்லை, கோவையில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் யாத்திரை செல்வோருக்கான தேதிகள் அறிவிப்பு!!

தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் யாத்திரை செல்வோருக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2026 மே 17 முதல் 20 வரை சென்னையில் இருந்து ஜித்தாவுக்கு ஹஜ் பயணம் மேற்கொள்ளலாம் என்றும் மறுமார்க்கமாக மதினாவில் இருந்து சென்னைக்கு ஜூன் 5 முதல் 8 வரை பயணம் மேற்கொள்ளலாம் என்றும் இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

கரூர் சம்பவம் தொடர்பாக மாவட்ட செயலர் மதியழகன், ஆனந்த், நிர்மல் குமார் உள்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு!!

கரூர் சம்பவம் தொடர்பாக மாவட்ட செயலர் மதியழகன், ஆனந்த், நிர்மல் குமார் உள்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கலவரத்தில் ஈடுபடுதல், பொது, தனியார் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. நிர்வாகிகள் ஆனந்த். கரூர் மாவட்டச் செயலர் மதியழகன், நிர்மல்குமார் ஆகியோரை விசாரிக்க போலீஸ் திட்டமிட்டுள்ளது. விசாரணைக்கு வராவிட்டால் கைது செய்து விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக காவல் துறையினர் தகவல் அளித்துள்ளனர்.

கரூர் துயரம்: பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து விவரங்களை கேட்டறிந்து அறிக்கை அளிக்க குழு அமைத்தது பாஜக!!

கரூர் துயரசம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து விவரங்களை கேட்டறிந்து அறிக்கை அளிக்க பாஜக குழு அமைத்துள்ளது. கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக நேரில் கேட்டறிய என்.டி.ஏ. கூட்டணி சார்பில் குழு அமைத்துள்ளது. பாஜக எம்.பி. ஹேமமாலினி தலைமையிலான குழுவில் என்.டி.ஏ. கூட்டணி எம்.பி.க்கள் 8 பேர் உள்ளனர்.

கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரிடம் நலம் விசாரித்தேன்; பாதிக்கப்பட்டோரை கண்டு கண் கலங்கி நின்றேன்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வேதனை!!

கூட்ட நெரிசலில் 41 பேர் இறந்தது போன்ற சம்பவம் இனி எங்குமே நடக்கக் கூடாது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கரூரில் பேட்டியளித்துள்ளார். கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரிடம் நலம் விசாரித்தேன். என்னையும், அமைச்சர் எல்.முருகனையும் இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற பிரதமர் மோடி அனுப்பி வைத்தார். பாதிக்கப்பட்டோர் பேசுவதை கேட்டவுடன் கலங்கி நின்றேன். பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க மட்டுமே வந்தேன்; இதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. சிகிச்சை பெறுவோரின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறினர் என தெரிவித்தார்.

மீண்டும் மீண்டும் அதிர்ச்சி கொடுக்கும் தங்கம்..!!ஒரு சவரன் ரூ.86 ஆயிரத்தை எட்டியது!!

தமிழகத்தில் நேற்று முன்தினம் (செப் 27) தங்கம் விலை கிராமுக்கு, 90 ரூபாய் உயர்ந்து, 10,640 ரூபாய்க்கும், சவரனுக்கு, 720 ரூபாய் அதிகரித்து, 85,120 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. நேற்று விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை. இந்நிலையில் இன்று (செப் 29) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.85,600க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.60 அதிகரித்து ஒரு கிராம் ரூ.10,700க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.86 ஆயிரத்தை எட்டியது.

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு எதிரொலி- நாளை கடையடைப்பு!!

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு எதிரொலியாக தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு நடத்தவிருப்பதாக வணிகர் சங்கங்களின் பேரவை அறிவித்துள்ளது. விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் இதுவ்ரை பலியாகியுள்ளனர். கரூரில் நடந்த விஜய் பிரசாரத்தில் 40 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு நடத்தப்படும் என தமிழக வணிகர் சங்கங்களின் பேரவை அறிவித்துள்ளது.

கரூரில் விஜய் பரப்புரையின்போது உயிரிழப்புகள் ஏற்பட்ட பகுதியில் வனத்துறையினர் ஆய்வு!!

கரூரில் விஜய் பரப்புரையின்போது உயிரிழப்புகள் ஏற்பட்ட பகுதியில் வனத்துறையினர் ஆய்வு வருகின்றனர். முறிந்து கீழே கிடக்கும் மரங்களை டேப் மூலம் அளவிடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மரம் முறிந்து எவ்வளவு உயரத்தில் இருந்து கீழே விழுந்து இருப்பார்கள் என்பதை பெயிண்ட் மூலம் குறித்து அளவீடு எடுத்து வருகின்றனர்.

மிகப்பெரிய கூட்டத்தை விஜய் கூட்டும் போதெல்லாம் பாதுகாப்பு கொடுத்தது காவல்துறைதான்: சீமான்!

விஜயின் பரப்புரையில் போலீஸ் பாதுகாப்பு இல்லை எனச் சொல்வதை ஏற்க முடியாது என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அத்தனை ஊர்களில் மிகப்பெரிய கூட்டத்தை விஜய் கூட்டும் போதெல்லாம் பாதுகாப்பு கொடுத்தது காவல்துறைதான். கரூரில் நெரிசலில் சிக்கிய பலரை ஆம்புலன்சில் ஏற்றி காவலர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள் என்று கூறியுள்ளார்.

கரூரில் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40ஆக அதிகரிப்பு!!

கரூரில் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40ஆக அதிகரித்துள்ளது.மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மேலும் ஒருவர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: பிரதமர் மோடி அறிவிப்பு

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். காயமடைந்து சிகிச்சை பெறுவோருக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கரூரில் கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு: தவெக விஜய் அறிவிப்பு

கரூரில் கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க உள்ளதாக த.வெ.க. தலைவர் விஜய் அறிவித்துள்ளார். நேற்று நடந்த சம்பவம் கற்பனைக்கும் எட்டாத வகையில் நடந்துள்ளது. காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என விஜய் அறிவித்துள்ளார்.

கரூர் துயர சம்பவம்: முதலமைச்சரிடம் அறிக்கை கேட்டுள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி!!

கரூரில் விஜய் பரப்புரையின்போது கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சரிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை கேட்டுள்ளார். உயிரிழந்தவர்களில் இதுவரை 7 பேரின் உடல்கள் தகனம் செய்யப்பட்டுள்ளது.

இனிமேல் இதுபோன்று விபத்துகள் நடக்கக் கூடாது, அதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கரூர் துயர சம்பவம் ஈடு செய்ய முடியாத இழப்பு. எவ்வளவு ஆறுதல் கூறினாலும் இழப்புக்கு வார்த்தைகளால் ஆறுதல் கூற இயலாது என துணை முதலமைச்சர் உதயநிதி கூறினார். இனிமேல் இதுபோன்று விபத்துகள் நடக்கக் கூடாது, அதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும் என செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் உறுதியளித்தார்.

கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.2லட்சம் நிதியுதவி: மோடி

கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.2லட்சம் நிதியுதவியும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிதியுதவியும் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். முன்னதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், “தமிழ்நாட்டின் கரூரில் ஓர் அரசியல் பேரணியின் போது நிகழ்ந்த துயரமான சம்பவம் மிகவும் வருத்தம் அளிக்கிறது. இந்த நிகழ்வில், தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கடினமான காலகட்டத்தில் அவர்கள் மன வலிமையைப் பெற விரும்புகிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் மேற்கொள்ள இருந்த பிரச்சாரம் ரத்து!!

அடுத்த வாரம் சனிக்கிழமை திருப்பத்தூர் ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் விஜய் மேற்கொள்ள இருந்த பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வாரம்தோறும் சனிக்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 13-ஆம் தேதி திருச்சியில் பிரச்சாரத்தை தொடங்கினார். கடந்த 20 ஆம் தேதி சனிக்கிழமை நாகை மற்றும் திருவாரூரில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். தொடர்ந்து நேற்று (சனிக்கிழமை) அவர் நாமக்கல் மற்றும் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். கரூரில் நேற்று இரவு நடந்த நடிகர் விஜய் கூட்டத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டு 39 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் அடுத்த வாரம் சனிக்கிழமை திருப்பத்தூர் ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் விஜய் மேற்கொள்ள இருந்த பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.