- Home
- /
- ஷாட்ஸ்

நிகிதா கொடுத்த நகை திருட்டு வழக்கு தொடர்பாக மடப்புரத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நிகிதா நகை திருட்டு தொடர்பாக தனிப்படை போலீஸ் விசாரணையில் ஜூன் 28ல் அஜித்குமார் உயிரிழந்தார். அஜித்குமார் வழக்கை சிபிஐ விசாரிக்கும் நிலையில் நிகிதா நகை திருட்டு வழக்கையும் விசாரிக்க ஐகோர்ட் கிளை ஆணையிட்டது. ஐகோர்ட் கிளை உத்தரவின் படி 3 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செவிலியர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பு என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நிரந்தர செவிலியருக்கு இணையாக ஒப்பந்த செவிலியருக்கு ஊதியம் தர உத்தரவிட்டதை எதிர்த்து தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம்நாத் அமர்வு விசாரித்தது. ஒன்றிய அரசிடம் உரிய நிதி கிடைக்காததால் ஒப்பந்த செவிலியருக்கான ஊதியம் நிலுவையில் உள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கும் பிரச்சனை குறித்து 4 வாரத்தில் பதில் அளிக்க அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

செங்கோட்டையன் கோரிக்கை பற்றி அதிமுக பொதுச்செயலாளர்தான் முடிவு செய்வார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து, செய்தியாளர்கள் சந்திப்பில் ஜெயக்குமார் கூறியதாவது; எம்.ஜி.ஆர். படத்தை பயன்படுத்தினால் மட்டும் அதிமுக வாக்கு விஜய்க்கு சென்றுவிடாது. அதிமுக வாக்குகள் விஜய்க்கு கிடைக்கும் என நினைத்தால் ஏமாற்றமே மிஞ்சும் என அவர் தெரிவித்தார்.

தலைவர்கள் இணையாவிட்டால், தொண்டர்கள் இணைந்து அதிமுகவை வழிநடத்துவார்கள் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த பின் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது; பிரிந்து கிடக்கும் அதிமுகவினர் ஒன்றிணைய வேண்டும். அதிமுக சட்டவிதிகளை காற்றில் பறக்க விட்டுவிட்டனர். அதிமுக சட்டவிதிகள் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. செங்கோட்டையனுடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன் என அவர் தெரிவித்தார்.

சீனாவுக்கு 50 முதல் 100% வரை விதிக்க நேட்டோ நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யாவுக்கு அழுத்தம் தரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை ஐரோப்பிய நாடுகள் நிறுத்த வேண்டும். ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால் அந்நாடு மீது மேலும் தடை விதிக்க முடியும் என அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெறும் இளையராஜாவின் பாராட்டு விழாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்துள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது. பாராட்டு விழாவில் வெளிநாட்டு கலைஞர்களுடன் இளையராஜாவின் சிம்பொனி கச்சேரி நடைபெறுகிறது. பாராட்டு விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இளையராஜா இசையமைத்த முதல் படம் அன்னக்கிளி வெளியாகி 50 ஆண்டு ஆகும் நிலையில் பாராட்டு விழா நடைபெறுகிறது.

வக்ஃபு சட்டத் திருத்தத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே இடைக்கால உத்தரவு பிறப்பித்த நிலையில் உச்சநீதிமன்றம் திங்கட்கிழமை தீர்ப்பளிக்கிறது. வக்ஃபு திருத்த சட்டப்படி உறுப்பினர் நியமனம் செய்யக் கூடாது என்றும், ஏற்கனவே பதியப்பட்ட வக்ஃபு சொத்துகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. வக்ஃபு சட்டத்திருத்தத்துக்கு எதிராக திமுக, விசிக, இந்திய கம்யூ. உட்பட 72 ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பசி, வேலையின்மை, வறுமை மலிந்துவிட்டால் இந்தியாவிலும் புரட்சி வெடிக்கும் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். காரைக்குடி அருகே குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழாவில் பேசிய அவர், இந்தியாவில் புரட்சி நடக்காமல் இருப்பதற்கு காரணம், நாம் இன்னும் ஜனநாயக நாடாக உள்ளோம். இந்தியாவில் புரட்சி வெடிக்காது என்று யாரும் நினைக்கக் கூடாது என்றும் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்தார்.

வியாசர்பாடி, எம்.எஸ். நகரில், 46.72 கோடி ரூபாய் செலவில் 308 நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள்; பழைய வியாசர்பாடியில், 34.61 கோடி ரூபாயில் 192 வாரிய குடியிருப்புகள்; வியாசர்பாடி, மூர்த்திங்கர் நகரில் 88.62 கோடி ரூபாயில் 642 குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன. இதில், வியாசர்பாடி, எம்.எஸ்.நகரில் கட்டப்பட்ட குடியிருப்புகளை திறந்து வைத்த துணை முதல்வர் உதயநிதி, பெண் பயனாளிகளுக்கான வீடு ஒதுக்கீடு ஆணை, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மொத்தம் 1,148 பேருக்கு வீட்டு ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், சேகூர் யானைகள் வழித்தடத்தில் உள்ள தனியார் நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை 6 மாதங்களில் தொடங்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. தனியார் நிலங்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நீதிபதி குழு உத்தரவை ஏற்க மறுத்த நீதிபதிகள், யானைகள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாமல், மின்வேலிகள் அமைக்காமல், விவசாய பணிகளை மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளது.

இனக்கலவரம் நடந்து 2 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக பிரதமர் மோடி இன்று மணிப்பூர் சென்றடைந்தார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் பிரதமர் மோடி மணிப்பூர் தலைநகர் இம்பால் சென்றடைந்தார். 2023-ல் குக்கி மற்றும் மெய்தி இன மக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. இம்பால் நகரிலிருந்து கார் மூலம் காங்லா கோட்டைக்கு செல்லும் மோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார். ரூ.7,300 கோடி திட்டங்களுக்கு அடிக்கல்: ரூ.1,200 மதிப்புள்ள திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பிரதமர் வருகையையொட்டி இம்பால் நகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் செப்டம்பர் . 13, 16, 17, 18, 19 என 5 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 7 முதல் 11 செ.மீ. வரை கனமழைக்கு வாய்ப்பு என்பதால் செப்.13, 16, 17, 18 ஆகிய 5 நாட்கள் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

வருமான வரியை தாக்கல் செய்ய 2 வாரம் அவகாசம் அளிக்க வேண்டும் என விசிக எம்.பி. திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். வருமான வரி தாக்கல் செய்ய அவகாசம் செப்டம்பர். 15ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில் கோரிக்கை வைத்தார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து விசிக எம்.பி.க்கள் திருமா, ரவிக்குமார் வலியுறுத்தினர்.

385 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் இருந்த எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க்கை, ஒராகிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லேரி எல்லிசன் பின்னுக்குத் தள்ளினார். இவரது சொத்து மதிப்பு 393 பில்லியன் அமெரிக்க டாலராகும்.. இப்படி சில மணி நேரங்கள் உலகின் நம்பர் ஒன் பணக்காரராக எல்லிசன் இருந்த நிலையில், எலான் மஸ்க் நிறுவனங்களின் பங்கு மதிப்பு உயரத் தொடங்கியது. இதனால் ஒரு பில்லியன் டாலர் சொத்து மதிப்பு வித்தியாசத்தில் மீண்டும் எலான் மஸ்க் முதலிடத்திற்கு வந்தார்.

பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி செலுத்தினார். அப்போது பேசிய அவர், இமானுவேல் சேகரன் 68 வது நினைவு நாளில் முதல்வர் அறிவுரைப்படி நானும், மூத்த அமைச்சர்களும் மரியாதை செலுத்தினோம். சமூக நீதிக்காக பாடுபட்ட இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம், சிலை அமைக்க ஏற்கனவே ரூ. 3 கோடி நிதி ஒதுக்கினோம். அதற்கான பணிகள் 95 சதவீதம் முடிந்து விட்டன. விரைவில் முழு பணிகளும் முடிந்து திறந்து வைக்க இருக்கிறோம். பா.ஜ., கட்டுப்பாட்டில் அ.தி.மு.க., வந்து விட்டதாக நீங்கள் கூறினீர்களே என கேட்ட போது, இங்கு அஞ்சலி செலுத்த வந்தேன். அரசியல் பேச விரும்பவில்லை என்றார்.







