மக்கள் நீதிமன்றத்தின் மூலம் ஒரே நாளில் 1629 வழக்குகள் விசாரணை

மக்கள் நீதிமன்றத்தின் மூலம் ஒரே நாளில் 1629 வழக்குகள் விசாரணை

Update: 2024-03-10 14:20 GMT
நாமக்கல் மாவட்டத்தில் நடந்த தேசிய லோக் அதாலத்தில், 1,629 வழக்குகளுக்கு, 19.52 கோடி ரூபாய் சமரசம் செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம், நேற்று நடந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு)முனுசாமி தலைமை வகித்தார். நீதிபதிகள் ஜெயபிரகாஷ், பிரவீனா, சுந்தரையா, சாந்தி, கிருஷ்ணன், மோகனப்பிரியா மற்றும் வட்ட அளவிலான சட்ட பணிகள் குழுவில் உள்ள நீதிபதிகள், வக்கீல்கள் முன்னிலையில், வழக்கு விசாரணை நடந்தது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் விஜய்கார்த்திக், வழக்கு விசாரணையை மேற்பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.அதில், விபத்துகள் தொடர்பான வழக்குகள், காசோலை, குடும்ப நலன், ஜீவனாம்சம், தொழிலாளர் நலன், மின் பயன்பாடு, வீட்டுவரி மற்றும் இதர பொது பயன்பாடு என, பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. நிலுவையில் உள்ள வழக்குகளை தவிர, புதிதாக தாக்கல் செய்ய உள்ள தகுதியுடைய வழக்குகள் மற்றும் பிரச்னைகளுக்கும் சமரச முறையில் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வுகாண வழிவகை செய்யப்பட்டது.திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்தி, சேந்தமங்கலம் மற்றும் குமாரபாளையம் என, மாவட்டம் முழுதும், 3,161 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. அதில், 1,629 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. அதன் மூலம், பாதிக்கப்பட்டவர்களுக்கு, 19 கோடியே, 52 லட்சத்து, 13,970 ரூபாய் செலுத்தி பைசல் செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் வழக்காடுபவர்கள் நேரடியாக பங்கேற்று, இழப்பீடு தொகை மற்றும் பிற பிரச்னைகளை இரு தரப்பினர் சம்மதத்துடன் விரைவில் தீர்க்கவும் மக்கள் நீதி மன்றங்கள் வழிவகை செய்கின்றன.
Tags:    

Similar News