பிரண்டை துவையல் செய்வது எப்படி ..!

Update: 2023-10-06 11:04 GMT

பிரண்டை துவையல்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தேவையான பொருட்கள் :

நறுக்கிய பிரண்டை - 1/4 கப்

வர மிளகாய் - 3

தேங்காய் துருவல் - 1/4 கப்

உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்

புளி - நெல்லிக்காய் அளவு

கருவேப்பிலை - 4 கொத்து

எண்ணெய் - 2 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை :

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம் பருப்பு மிளகாய் வற்றல் போட்டு பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். பிறகு கருவேப்பிலை ,பிரண்டை இரண்டையும் போட்டு நன்கு பொன்னிறமாக வதக்கவும். இவை நன்கு வதங்கியதும் அதனுடன் தேங்காய் துருவல் புளி உப்பு போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். இவை சூடு ஆறியவுடன் 3 டேபிள் ஸ்பூன் தண்ணீர் ஊற்றி நன்கு விழுதாக அரைத்து கொள்ளவும் . இப்போது பிரண்டை துவையல் தயார்.

சமையல் டிப்ஸ் :

தயிர் புளிக்காமல் இருக்க தயிருடன் சிறிது தேங்காய் துண்டை போட்டு வைத்தால் புளிக்காமல் இருக்கும் .

Tags:    

Similar News