ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370 வது சட்டப்பிரிவை நீக்கியது செல்லும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
Update: 2023-12-11 06:24 GMT
இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370 ஜம்மு & காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு சலுகைகள் வழங்க வழிவகை செய்கிறது. இந்த சட்டப்பிரிவிற்கு உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 சட்டப்பிரிவை ரத்து செய்தது சட்டப்படி செல்லும்.. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் 370வது சட்டம் தற்காலிகமானதே.. அந்த சட்டம் நிரந்தரமான வசதியை கொடுக்கும் சட்டம் கிடையாது. சுதந்திர போர் காலத்தில் கொடுக்கப்பட்ட தற்காலிக வசதி என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.