“என் மீது தாக்குதல் நடத்த முதல்வர் பினராயி சதி” - கேரள ஆளுநர் குற்றச்சாட்டு
Update: 2023-12-12 09:15 GMT
தன் மீது தாக்குதல் நடத்த கேரள முதல்வர் பினராயி விஜயன் சதி செய்துள்ளதாக அம்மாநில ஆளுநர் ஆரிஃப் கான் குற்றஞ்சாட்டியுள்ளார். கேரள முதல்வர் - ஆளுநர் மோதல் முன்பிருந்தே சர்ச்சையாக இருந்து வரும் நிலையில் கேரள ஆளுநர் சென்ற வாகனத்தின் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவான எஸ்எஃப்ஐ அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஆளுநர் முகமது ஆரிஃப் கான், தன் வாகனத்தை தாக்கி தன் மீது தாக்குதல் நடத்த பினராயி விஜயன் சதி செய்துள்ளார் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.