ரூ.2,000 நோட்டு - ஆர்பிஐ யின் புதிய அறிவிப்பு என்ன?

Update: 2023-10-03 12:03 GMT

ஆர்பிஐ

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டது. அப்போது அறிமுகம் செய்யப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகளை, புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் 19ம் தேதி அறிவித்திருந்தது.

அப்போது, ரிசர்வ் வங்கி, " 2000 ரூபாய் நோட்டுகளின் ஆயுட்காலம் முடிவடையும் தருவாயில் இருப்பதாகவும், 2000 ரூபாய் நோட்டுகள் பரிவர்த்தனைகளுக்கு மக்கள் முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை என்றும், பொதுமக்களின் பணப்புழக்கத் தேவையைப் பூர்த்தி செய்ய மற்ற மதிப்புகளில் உள்ள ரூபாய் நோட்டுகளின் கையிருப்பு தொடர்ந்து போதுமானதாக உள்ளது என்றும் கூறி 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற முடிவு செய்வதாக அறிவித்தது.

மேலும், பொதுமக்களுக்கு ஏற்ற வகையில் அனைத்து வங்கிகளும் 2023 செப்டம்பர் 30 வரை ரூ.2000 நோட்டுகளை டெபாசிட் அல்லது மற்ற நோட்டுகளாக மாற்றும் வசதியை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தது.

இந்நிலையில், 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான இறுதித் தேதி நெருங்க நெருங்க மக்கள் 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் அல்லாத பிற வணிகத் தளங்களிலும், பேருந்துகளிலும் மாற்றுவதும் நிகழ்ந்தன.

அதனால், செப்டம்பர் 28ஆம் தேதி முதல் பயணிகளிடம் 2,000 ரூபாய் நோட்டுகளை பேருந்துகளிலும், பெட்ரோல் பங்க்களிலும் பிற வணிக வளாகங்களிலும் வாங்கக் கூடாது என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ரிசர்வ் வங்கி அறிவித்த இறுதி தேதி முடிவடைந்த நிலையில் ரிசர்வ் வங்கி மீண்டும் கால அவகாசம் நீட்டி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஏனெனில் , 2023 மே 19 அன்று 3.56 லட்சம் கோடி 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்த நிலையில், 2023 செப்டம்பர் 29 அன்று வரை 3.42 லட்சம் கோடி 2000 ரூபாய் நோட்டுகள், அதாவது 96% 2,000 ரூபாய் நோட்டுகள் இதுவரை திரும்ப பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தற்போது, வெறும் ₹0.14லட்சம் கோடி 2000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், 2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறும் கால அவகாசத்தை அக்டோபர் 7ம் தேதி வரை இந்திய ரிசர்வ் வங்கி நீட்டித்துள்ளது.

Tags:    

Similar News