நாமக்கல்லில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை நடைபெறுகிறது

Update: 2023-07-10 09:55 GMT

தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி

நிலையங்கள் மற்றும் 330 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கிவருகின்றன.

இவற்றில் தற்போது 2023 -2024 ஆம் கல்வியாண்டிற்கான பயிற்சியாளர் சேர்க்கை

நடைபெற்று வருகிறது.

தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு, இருக்கைகளின் சேர்க்கைக்கான

ஒதுக்கீடு விவரங்கள் 10.07.2023 அன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த

நிலையில் தற்போது முன் கூட்டியே 4.07.2023 அன்று www.skilltraining.tn.gov.in என்ற

இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் தனது தற்காலிக

ஒதுக்கீட்டானையை மேற்குறிப்பிட்ட இணைய தளத்திற்குள் சென்று Login செய்து அறிந்து

கொள்ளலாம் அதன் பிறகு நாமக்கல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் கீரம்பூர் சென்று

தற்காலிக ஒதுக்கீட்டு ஆணையை பெற்று அசல் சான்றிதழ் சரிபார்த்து உரிய கட்டணம்

செலுத்தி சேர்க்கையினை உறுதி செய்து கொள்ளலாம்.

இதற்கான கடைசி தேதி 12/7/2023 ஆகும்

மேலும் விவரங்களுக்கு 04286-299597, 04286-247472, 9500661559, 8946095841,

9789093929 என்ற தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.

Tags:    

Similar News