ஃபேஷன் துறையின் வேலைவாய்ப்பு பிரகாசமாக உள்ளது’ - சிறப்புரை.
சங்ககிரி விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் அங்கமான விவேகானந்தா கலை அறிவியல் மகளிர் கல்லூரியின் டெக்ஸ்டைல் ஃபேஷன் மற்றும் காஸ்டியும் டிசைனிங் ஃபேஷன் துறைகளின் சார்பில் மத்திய அரசின் சிறுகுறு தொழில் அமைச்சரவை சார்ந்த உ.பி. ஆக்ரா டி.டி.சி மற்றும் பி.பி.டி.சி துறைகளின் சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து ஆனது.
புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சிக்கு விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் மற்றம் மருத்துவமனைகளின் தாளாளர் மற்றும் செயலர் பேராசிரியர் டாக்டர் மு.கருணாநிதி தலைமை தாங்கினர். நிர்வாக இயக்குனர் கிருஷ்ணவேணி கருணாநிதி, இணை நிர்வாக இயக்குநர் டாக்டர்அர்த்தநாரீஸ்வரன், இணைச் செயலாளர் டாக்டர் ஸ்ரீராகநிதிஅர்த்தநாரீஸ்வரன், துணைத் தலைவர் டாக்டர் கிருபாநிதி கருணாநிதி, இயக்குநர் டாக்டர் நிவேதனா கிருபாநிதி, செயல் இயக்குநர் டாக்டர் குப்புசாமி, தலைமை செயல்அதிகாரிகள் பேராசிரியர் சொக்கலிங்கம், பேராசிரியர்வரதராஜீ, விவேகானந்தா கலை அறிவியல் மகளிர் கல்லூரி முதல்வர் டாக்டர் பாலசுப்பிரமணியன், டெக்ஸ்டைல் ஃபேஷன் மற்றும் காஸ்டியும் டிசைனிங் ஃபேஷன் துறைகளின் டீன் பேராசிரியர் டாக்டர் சி.கே.இரவிசங்கர், ஐ.க்யூ.சி இயக்குநர் டாக்டர்சுரேஷ்குமார், அட்மிஷன் அதிகாரி பேராசிரியர் தழிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக மத்திய அரசின் சிறுகுறு தொழில் அமைச்சரவையின் உத்திரபிரதேசம், ஆக்ராவை தலைமைச் செயலகமாகக் கொண்ட ஆலோசகர் பேராசிரியர் சோமசுந்தரம் கலந்து கொண்டார். ‘ஃபேஷன் துறை மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவோர் வாய்ப்பு’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றிய மத்திய அமைச்சரவை ஆலோசகர் பேராசிரியர் சோமசுந்தரம், ‘டெக்ஸ்டைல், ஃபேஷன், காஸ்டியும் மாணவர்களுக்கான சர்வதேச பொருளாதார சந்தைவாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளன; ஃபேஷன் துறையில் பட்டம் பெறும் முன்பே பன்னாட்டு நிறுவனங்களில் மிக அதிக ஊதியத்தில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு காத்திருக்கிறது; அதேபோல் தொழில் முனைவோராக ஃபேஷன் துறையில் மிகவும் செல்வச செழிப்புடன் முன்னேறலாம்’ என்று குறிப்பிட்டார்.
‘மத்திய அரசின் சிறுகுறு தொழில் அமைச்சரவை சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தில்லி புராஜெக்ட் டைரக்டர் மற்றும் ஆலோசகர் பேராசிரியர் சோமசுந்தரம் கையெழுத்திட்டார். விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் சார்பில் தாளாளர் மற்றும் செயலர் பேராசிரியர் டாக்டர்மு.கருணாநிதி, முதல்வர் டாக்டர் பாலசுப்பிரமயன், டெக்ஸ்டைல் ஃபேஷன் மற்றும் காஸ்டியும் டிசைனிங் ஃபேஷன் துறைகளின் டீன் பேராசிரியர் டாக்டர் சி.கே.இரவிசங்கர் ஆகியோர் கையெழுத்திட்டனர். மத்திய அரசின் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் டெக்ஸ்டைல் ஃபேஷன் மற்றும் காஸ்ட்யும் டிசைனிங் ஃபேஷன் துறைகளின் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளுக்கு பன்னாட்டு ஃபேஷன் தொழில் சார்ந்த ஆன்லைன் சிறப்பு வகுப்புகள் மற்றும் நேரடி பயிற்சிகள் ஆகியவை மானிய அடிப்படையில் மத்திய அரசின் வல்லுநர்களால் வழங்கப்படும். அது மட்டும் அல்லாமல் மத்திய அரசின் பல்நோக்கு தொழிற்சாலைகளில் விவேகானந்தா மாணவிகளுக்கு 15 நாட்களுக்கு இலவச் தொழிற்பயிற்சி அளிக்கப்படும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உடனடியாக அமலுக்குவருகிறது இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் திறன் மேம்பாடுபெறும் மாணவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரைதொழில் தொடங்கமத்திய அரசு உதவி செய்கிறது; அதுமட்டுமல்லாமல் இத்திட்டதின் மையமா செயல்படும் கல்லூரிகளின் ஆய்வகங்களுக்கு 40 லட்சம் ரூபாய் முதல் 1.5 கோடிவரைமத்தியஅரசின் உதவிகிடைக்கும்’. என்று மத்திய அரசின் சிறுகுறு தொழில் அமைச்சரவை ஆலோசகர் சோமசுந்தரம் செய்தியாளர்களிடம் கூறினார். புரிந்துணர்வு ஒப்பந்த விழாவிற்கான ஏற்பாடுகளை விவேகானந்தா டெக்ஸ்டைல் ஃபேஷன் மற்றும் காஸ்ட்யும் டிசைனிங் ஃபேஷன் துறைகளின் மாணவியர் அமைப்பினர் சிறப்பாக செய்திருந்தனர்.