நிலமுகவர்கள் சங்கத்தினரின் ஆலோசனை கூட்டம்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா நிலம் முகவர்கள் நல முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகம் மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு சங்கத் தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார் சங்கத்தின் செயலாளர் சிவராமன் அனைவரையும் வரவேற்றார் இந்த ஆலோசனை கூட்டத்தில் வருகின்ற ஆயுத பூஜை தினத்தை முன்னிட்டு விழா நடத்துவது குறித்தும் புதிய சங்கப் பெயர் பலகை திறப்பு விழா நடத்துவது குறித்தும் உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டைகள் வழங்குவது முப்பெரும் விழா நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து சங்க நிர்வாகிகள் பல்வேறு ஆலோசனைகள் வழங்கியதனை ஏற்றுக்கொண்டு வரும் காலங்களில் நில முகவர்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்க செய்ய வேண்டிய நற்பணிகளை தொடர்வதென தீர்மானிக்கப்பட்டது முடிவில் சங்க நிர்வாகி முத்து நன்றியுரை கூறினார்.
இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் மணிகண்டன், பரமன். பாண்டியன், பங்காரு, சுரேஷ் குமார், உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.