குமரியில் மனித சவால்கள் ஆய்வுக்கான அறிமுக கூட்டம்

குமரி அறிவியல் பேரவை சார்பில் மனித சவால்கள் என்ற தலைப்பில் ஆய்வு அறிமுக கூட்டம் ஆற்றூர் என்.வி.கே.எஸ்.டி கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது.

Update: 2023-10-30 08:40 GMT

ஆய்வு கூட்டம்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

குமரி அறிவியல் பேரவை சார்பில் மனித சவால்கள் என்ற தலைப்பில்  ஆய்வு அறிமுக கூட்டம்  ஆற்றூர் என்.வி.கே.எஸ்.டி கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது.  இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தேசியத்தலைவர் டாக்டர் கே.விஜயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார். 

குமரி அறிவியல் பேரவை அமைப்பாளர் முள்ளஞ்சேரி மு.வேலையன் அறிமுகவுரையாற்றினார். மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் துணை திட்ட இயக்குனர் புதியவன் தேர்வு பெற்றவர்களுக்குப் பாராட்டு விருது வழங்கி கவுரவித்தார். ஒருங்கிணைப்பாளர்கள் ஜாண்சன், அஞ்சு, முனைவர் தன்யா, சுனில்குமார், பாலகிருஷ்ணன், பிரியாஸ்ரீஜித், சிறுபுஷ்பம் டெசிஜோசப், பா.மலர் ஆனந்த்விசுவனாதன் ஆகியோர் வாழ்த்திப்பேசினார்கள். 

மனித சவால்கள் குறித்த ஆய்வுக்காக 55 பேர் தேர்வு செய்யப்பட்டார்கள், இவர்கள் குமரி மாவட்ட பள்ளிகளில் இருந்து ஜீலைமாதம் தொடங்கப்பட்ட தேர்வுகளில் திருக்குறள், செய்திவாசித்தல், நூல்ஆய்வு, மரக்கன்று நடுதல் காந்திய சிந்தனை, போஸ்டர் தயாரித்தல், திட்ட அறிக்கை தயாரித்தல், பழங்கள்பற்றி விளக்குதல், அறிக்கைகள் எழுதுதல் கண்டுபிடிப்புகள், கண்காட்சி என பல்வேறுகட்ட தேர்வுகளுக்குப் பின்னர் மொத்த தேர்வுகளை மதிப்பீடு செய்து 55 பேர்களை ஆய்வுக்காக தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் 5 குழுக்களாகப்பிரித்து ஒரு அணிக்கு 11 பேர்வீதம் இயற்கை வளச்சவால்கள், வறுமைசவால்கள் வேளாண்மை சவால்கள் சைபர்சவால்கள், தொழில் நுட்ப சவால்கள் என ஐந்து தலைப்புகளில் ஆய்வு செய்வார்கள். ஆய்வுகளை முடித்து மே மாத இறுதியில் ஏதேனும் பல்கலைக்கழகத்தில் ஆய்வு அறிக்கையைச்சமர்ப்பித்து நூலாக வெளியிடுவார்கள். பின்னர் நடைபெறும் விழாவில் இளம்விஞ்ஞானி விருது வழங்கப்படும்.

Tags:    

Similar News