ஆரணி ஜெ.டி.ஆர் வித்யாலயா பள்ளியில் அறிவியல் கண்காட்சி
ஆரணி ஜெ.டி.ஆர் வித்யாலயா பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பாப்பாத்திஅம்மன் கோயில் தெருவில் உள்ள ஜெ.டி.ஆர் வித்யாலயா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
ஆரணி பாப்பாத்திஅம்மன் கோயில் தெருவில் உள்ள ஜெ.டி.ஆர் வித்யாலயா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் பள்ளி தாளாளர் டில்லிபாபு தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ராஜேஸ்வரி அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வட்டாட்சியர் மஞ்சுளா துவக்கி வைத்து மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டார். பின்னர் மாணவர்கள் தயாரித்து வைத்திருந்த அறிவியல் படைப்புகள் குறித்து வட்டாட்சியர் சந்தேகங்கள் கேட்க மாணவர்கள் பதிலளித்தனர்.
இதில் சந்திராயன் 2 மாதிரி, சுற்றுச்சூழல், வரலாற்று சின்னங்கள், காடுகள் பாதுகாப்பு உள்ளிட்ட படைப்புகளை மாணவர்கள் செய்திருந்தனர். மேலும் இதில் வருவாய் ஆய்வாளர் நித்யகல்யாணி, ஆசிரியைகள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.