ஓமலூர் சார்பு நீதிமன்றத்தில் லோக் அதாலத் முகாம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
Omalur court;
By : King 24X7 News (B)
Update: 2023-11-25 04:08 GMT
சேலம் மாவட்டம், ஓமலூர் சார்பு நீதிமன்றத்தில் வருகிற டிசம்பர் 9ஆம் தேதி அன்று தேசிய அளவிலான லோக் அதலாத் என்று சொல்லக்கூடிய சமரச தீர்வு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் சம்பந்தமாக ஓமலூர் நீதிமன்ற வளாகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சார்பு நீதிபதி, மாவட்ட உரிமையியல் நீதிபதி, குற்றவியல் நடுவர், அரசு வழக்கறிஞர் கார்த்திகேயன், ஓமலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சங்கீதா, காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.