கூடலூரில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு.
கூடலூரில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2023-11-25 10:50 GMT
உயிரிழந்தவர்
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மரப்பாலம் பால்மேடு TAN TEA பகுதியில் பிரான்சிஸ் என்பவரை நேற்று இரவு காட்டு யானை தாக்கியது. சிகிச்சைக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பிரான்சிஸ் மேல் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பொழுது வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கூடலூர் பகுதிகளில் யானைகள் தாக்கி ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.