தேசிய தடகள போட்டியில் சாதனை
தேசிய தடகள போட்டியில் சாதனை படைக்கப்பட்டுள்ளது.
By : King 24X7 News (B)
Update: 2023-11-26 09:13 GMT
திண்டுக்கல் டி.என்.யூ., எஸ்.எம்.பி.எம்.மெட்ரிக் பள்ளி 11ம் வகுப்பு மாணவர் ஜித்தின் அர்ஜூணன் ஆர்.சி.கோயம்புத்துாரில் நடந்த தேசிய தடகள போட்டியில் 17 வயது பிரிவு நீளம் தாண்டுதல் போட்டியில் 39.7 மீ., தாண்டி தங்கபதக்கம் வென்றார்.
ஹெக்ஸாத்லான் என்ற ஆறு வகையான வெவ்வேறு விளையாட்டு போட்டிகளில் 4050 புள்ளிகள் பெற்று தேசிய அளவில் புதிய சாதனை படைத்துள்ளார். 2025ல் நடைபெற உள்ள தெற்காசிய தடகள போட்டியில் இந்திய அணி சார்பாக பங்கேற்கிறார்.
இவருக்கு வி.ஜி.ஸ்போர்ட்ஸ் அகடாமி சார்பில் ஹாக்கி வீரர் ஞானகுரு தலைமையில் பாராட்டு விழா நடந்தது. முன்னாள் கால்பந்து வீரர் ராஜேந்திர குமார், மாவட்ட குத்துச்சண்டை அகடாமி தலைவர் ஜான் ஆரோக்கியசாமி, ஹாக்கி சங்க துணைத் தலைவர் பரந்தாமன், தடகள பயிற்சியாளர் சந்திரசேகரன் வாழ்த்தினர்.