புதிய பாதை அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை

விஜயபுரம் கிராமத்திற்கு புதிய பாதை அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை;

Update: 2023-11-30 02:31 GMT

விஜயபுரம் கிராமத்திற்கு புதிய பாதை அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

புதுக்கோட்டை அருகே உள்ளது விஜயபுரம் கிராமத்தில் 200 ஆதிதிராவிட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் ஏராளமானோர் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்த ஊரை சுற்றி மூன்று புறமும் அரசுக்கு சொந்தமான தைல மரக்காடுகள் உள்ளன. புதுக்கோட்டை தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை உட்புறத்தில் காடுகளின் நடுவே அமைந்துள்ள இக்கிராமத்திற்கு செல்லும் சாலை அண்மையில் பெய்த மழையினால் பழுதடைந்து, பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் காட்டுப்பகுதி வழியாக செல்வதால் பல்வேறு இன்னர்களுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக மாலை நேரங்களில் இந்த காட்டில் கஞ்சா போதையில் இளைஞர்கள் அவ்வழியே செல்வோரை தாக்குவதும், பெண்களை கிண்டல் செய்வதும் என தீய செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி ஜெயராஜ் கூறுகையில், கிராமத்திற்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்துள்ளதால், சகதியில் சிக்கி அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் செல்லவும் முடியாத நிலை உள்ளது. இதனால் பலா் அவசர சிகிச்சை செல்ல முடியாமல் தவித்த நிலை ஏற்பட்டது. குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் பெண்மணி ஒருவா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை கூறியும், எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலை அமைக்கவில்லை என்றால் வரும் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் சென்று எங்களுடைய குடும்ப அட்டை, வாக்காளர் அட்டைகளை ஒப்படைத்து விட்டு இந்த ஊரை விட்டு வெளியேறுவோம் அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

Tags:    

Similar News