தேசிய மக்கள் நீதிமன்ற ஆலோசனைக் கூட்டம்.

சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது .

Update: 2023-12-03 16:23 GMT

ஆலோசனை கூட்டம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்ற ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது . மாவட்ட உரிமையியல் நீதிபதி கோபாலரசி தலைமை வகித்தாா். குற்றவியல் நீதிபதி கலையரசி ரீனா முன்னிலை வகித்தாா். அரசு வழக்குரைஞா் ரகுபத்மன், ஆய்வாளா்கள் சாத்தான்குளம் முத்து, தட்டாா்மடம் திருநாவுக்கரசு, நாசரேத் ஜெயசீலன், வழக்குரைஞா்கள் பிளஸ்சிங், பிருந்தா, ஷீபா ஐரின் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

சிறிய வழக்குகள், மோட்டாா் வாகன வழக்குகள், குடும்ப நல வழக்குகளைத் தீா்த்துவைக்க இம்மாதம் 9ஆம் தேதி மக்கள் நீதிமன்றம் நடத்துவது என் முடிவு செய்யப்பட்டது. வட்ட சட்டப் பணிக்குழு நிா்வாக உதவியாளா் ஜோன்ஸ் நன்றி கூறினாா்.

Tags:    

Similar News