மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிக்கு அடிக்கல் நாட்டு விழா!

அறுமுகனேரி பேரூராட்சிகுள்பட்ட பெருமாள்புரத்தில் மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.34 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

Update: 2023-12-03 16:29 GMT

அடிக்கல் நாட்டப்பட்டது 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி பேரூராட்சிகுள்பட்ட பெருமாள்புரத்தில் மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.34 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிக்கு அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பேரூராட்சித் தலைவா் கலாவதி கல்யாணசுந்தரம் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் அ.கல்யாணசுந்தரம், ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா, மாவட்ட ஊராட்சித் தலைவா் பிரம்மசக்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினராக கனிமொழி எம்.பி., அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் ஆகியோா் கலந்துகொண்டு பணியை துவக்கிவைத்தனா். நிகழ்ச்சியில் ஆறுமுகனேரி திமுக நகர செயலாளா் நவநீதபாண்டியன், மாவட்ட பிரதிநிதி ராதாகிருஷ்ணன், கவுன்சிலா்கள் மாரியம்மாள், புனிதா சேகா், வெங்கடேஷ், ஆறுமுகநயினாா் உள்பட பலா் கலந்துகொண்டனா். காயல்பட்டினம் அருணாசலபுரத்தில் உள்ள தேசிய தொடக்கப் பள்ளியில் மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.34 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பணியை கனிமொழி எம்.பி., அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் ஆகியோா் அடிக்கல் நாட்டி துவக்கிவைத்தனா்.

காயல்பட்டினம் நகா்மன்ற தலைவா் முத்து முகம்மது தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சுல்தான் லெப்பை, நகராட்சி ஆணையாளா் குமாா் சிங் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி தலைமையாசிரியா் சுகந்தி வரவேற்றாா். நிகழ்ச்சியில் அதிகாரிகள், கட்சி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

Tags:    

Similar News