குளச்சலில் விபத்து : தனியார் நிதி நிறுவன ஊழியர் பலி

குளச்சலில் நடந்த விபத்தில் தனியார் நிதி நிறுவன ஊழியர் பலியானர்.;

Update: 2023-12-05 13:49 GMT
விபத்தில் பலியான அஜின்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

குமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள பாலவிளை பகுதியை சேர்ந்தவர் நடராஜன் மகன் அஜின் (28). இன்னும் திருமணம் ஆகவில்லை. குளச்சலில் உள்ள ஒரு தனியார் நிதி  நிறுவனத்தில் பணம் வசூல் செய்யும் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று மாலை வசூலான பணத்தை நிறுவனத்தில் அடைப்பதற்காக பாலப்பள்ளம் பகுதியில் இருந்து குளச்சல் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற அரசு பஸ்ஸை முந்தி செல்ல முயன்ற நேரத்தில் எதிரே வந்த ஒரு கார் வேகமாக மோதியதில் பைக் தடுமாறி சாலையில் விழுந்து.       

இதில் அஜின் இறந்துள்ளார். இது குறித்து நடராஜன் குளச்சல் போலீசில் புகார் செய்தார் குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News