லயன் சங்கம் மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து நடத்திய கண் சிகிச்சை முகாம்
தாந்தோணிமலையில் லயன் சங்கம் மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து நடத்திய கண் சிகிச்சை முகாம்.;
Kan மருத்துவ முகாம்
லயன் சங்கம் மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து நடத்திய கண் சிகிச்சை முகாம். கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், கரூர் இமயம் லயன் சங்கம், கரூர் அரசன் கண் மருத்துவமனை மற்றும் கரூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியோர் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் இன்று காலை 9 மணி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் கலந்து கொள்ளும் பொது மக்களுக்கு கண்ணில் குறை உண்டாகுதல், மாறு கண், நீர் அழுத்த நோய், மாலைக்கண் நோய், சீழ், நீர் வடிதல், கிட்ட பார்வை, தூரப்பார்வை ஆகிய குறைபாடுகளுக்கான பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேவைப்படுபவர்களுக்கு லென்ஸ் மற்றும் அறுவை சிகிச்சை, மருந்து,தங்கும் வசதி, உணவு மற்றும் கரூர் சென்று வர போக்குவரத்து செலவு அனைத்தும் இந்த அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
இந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற இணை இயக்குனர் மருத்துவர் விஜயகுமார், லயன் மண்டல தலைவர் கந்தசாமி, வட்டார தலைவர் சுந்தர கணேசன், எக்ஸ்டன் சேர்மன் ஜெயபால், லயன் சங்கத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் கூடலரசன், செல்லதுரை, இணை செயலாளர் சம்பத்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கண் சிகிச்சை செய்வதற்கான பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
நோய் தாக்கம் உள்ள பொது மக்களுக்கு சிகிச்சை பெறுவதற்கான ஆலோசனைகளையும் வழங்கினர்.