வேலூரில் கேலோஇந்தியா போட்டியில் பங்கேற்கும் மாணவிக்கு வழியனுப்பு விழா
வேலூரில் கேலோஇந்தியா போட்டியில் பங்கேற்கும் மாணவிக்கு வழியனுப்பு விழா நடைபெற்றது.;
வழியனுப்பும் விழா
வேலூர் மாநகராட்சியின் துணை மேயர் எம்.சுனில்குமார், மண்டல தலைவர் புஷ்பலதா வன்னியராஜ் பாராட்டு. வேலூர் மாவட்டம், காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பில் பயின்று வரும் என்.பி.ஆதர்ஷினிஶ்ரீ என்ற மாணவி 6வது கேலோ இந்தியா இறகுபந்து விளையாட்டு போட்டியில் பங்கேற்க தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற வழியனுப்பு விழாவில் வேலூர் மாநகராட்சியின் துணை மேயர் சுனில்குமார், முதல் மண்டல தலைவர் புஷ்பலதா வன்னியராஜ் ஆகியோர் பரிசளித்து பாராட்டி பேசினார். பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியை(பொ) மாரிமுத்து தலைமை தாங்கினார்.
ஜுனியர் ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர் ஜனார்த்தனன், மாமன்ற உறுப்பினர் சித்ரா மகேந்திரன் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் மகேந்தினர் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். முன்னதாக உடற்கல்வி ஆசிரியை புவனா வரவேற்று பேசினார்.