கலெக்டர் தலைமையில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்   

தக்கலையில் நடைபெற்றது

Update: 2024-01-27 08:46 GMT
கலெக்டர் தலைமையில் கிராமசபை கூட்டம்

கன்னியாகுமரி மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் 75-வது குடியரசு தின விழாவையொட்டி தக்கலை ஊராட்சி ஒன்றியம், சடையமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட, சித்தன்தோப்பு அன்னை சமூக நலக்கூடத்தில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்தும், தனி நபர் சுகாதாரம் மற்றும் குப்பைகளை வீட்டிலேயே தரம் பிரித்தல், அனைத்து பொது இடங்களையும் சுத்தமாக பேணுதல், வீட்டிலிருந்து வரும் கழிவுநீர்கள் ஆறுகள், குளங்களில் சேருவதை தவிர்ப்பது குறித்தும், திறந்தவெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சியாக மாற்றுவது குறித்தும், திறந்தவெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், பள்ளி கழிப்பறைகள் மற்றும் அங்கன்வாடி மையக்கழிப்பறைகளை சுகாதாரமாக பயன்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற சமத்துவ விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். கூட்டத்தில், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News